Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 01.12.2020

இன்றைய ராசிப்பலன் – 01.12.2020

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.

கடகம்

இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.

கன்னி

இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். பயணங்களில் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

தனுசு

இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.

கும்பம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்து தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + eleven =

Most Popular