Saturday, October 14, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 04.12.2020

இன்றைய ராசிப்பலன் – 04.12.2020

மேஷம்

இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

ரிஷபம்

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பிள்ளைகளால் சுப செய்தி கிடைக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

கன்னி

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு அனு-கூலமான பலன் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

விருச்சிகம்

இன்று நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிலருக்கு வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். தேவைகள் நிறைவேறும்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகரம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு காலையிலேயே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 14 =

Most Popular