Saturday, October 14, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 08.09.2020

இன்றைய ராசிப்பலன் – 08.09.2020

மேஷம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். நண்பர்களின் உதவியால் பணகஷ்டம் குறையும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் மூலம் சுபசெலவுகள் ஏற்படும். அரசு துறை சார்ந்தவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மிதுனம்

இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்

இன்று உங்களுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் ஏற்படும் நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். வேலையில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். தொழில் ரீதியான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு பகல் 03.10 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வேலையில் வீண் அலைச்சல் உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம். மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறைந்து மன அமைதி ஏற்படும்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 03.10 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியூர் பயணங்களால் அ-னுகூலப்பலன் உண்டாகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் உதவுவார்கள்.

கும்பம்

இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

மீனம்

இன்று குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 2 =

Most Popular