Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 14.05.2020

இன்றைய ராசிப்பலன் – 14.05.2020

மேஷம்
இன்று எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் பொறுப்புடன் செயல்படுவார்கள். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் அனுகூலங்கள் ஏற்படும்.

ரிஷபம்
இன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும்.

மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது சிறப்பு.

கடகம்
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபகாரிய முயற்சிகளில் நல்ல செய்தி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். இருக்கும் இடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு அனுகூலங்களை அடைவீர்கள். வேலையில் இருந்த நெருக்கடிகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவதால் நன்மை அடைவீர்கள்.

துலாம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். பெண்களுக்கு பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப் படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.

தனுசு
இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள்.

மகரம்
இன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக கடந்த கால சிக்கல்கள் விலகும்.

கும்பம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிட்டும். வியாபார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + five =

Most Popular