Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 03.10.2020

இன்றைய ராசிப்பலன் – 03.10.2020

மேஷம்

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அனுபவமுள்ள பெரியவர்களின் நட்பு கிட்டும்.

ரிஷபம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.

கடகம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

சிம்மம்

இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 08.50 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை அமைதியாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை மதியத்திற்கு பின் தொடங்குவது உத்தமம். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

கன்னி

இன்று உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள், எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு காலை 08.50 க்கு பிறகு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.

துலாம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உடல் நலம் சீராக இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய பண வரவு தக்க நேரத்தில் வந்து சேரும். வேலையில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.

விருச்சிகம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார முன்னேற்றத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வரும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

மகரம்

இன்று வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை உருவாகும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

கும்பம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மீனம்

இன்று உங்களுக்கு எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். எடுக்கும் காரியங்களில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 7 =

Most Popular