Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 05.04.2020

இன்றைய ராசிப்பலன் – 05.04.2020

மேஷம்

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது நல்லது.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.

கடகம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

சிம்மம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பூர்வீக சொத்து பிரச்சினைகள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

துலாம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களின் உதவியுடன் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும். மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தனுசு

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். எந்த ஒரு சுப காரியத்தையும், தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கும்பம்

இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களும் நிறைவேறும்.

மீனம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்துடன் தூர பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினைகள் குறையும். சேமிப்பு உயரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =

Most Popular