Friday, October 27, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 05.07.2020

இன்றைய ராசிப்பலன் – 05.07.2020

மேஷம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.

மிதுனம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

சிம்மம்
இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

கன்னி
இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த உபாதைகள் நீங்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். வெளி பயணங்களால் வீண் செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

தனுசு
இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மகரம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.

கும்பம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =

Most Popular