Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 11.07.2020

இன்றைய ராசிப்பலன் – 11.07.2020

மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெற்றோரின் ஆதரவு நம்பிக்கையை அளிக்கும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

ரிஷபம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். சுபமுயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும். புத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

சிம்மம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுப முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

கன்னி
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்ல படியாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

துலாம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ள நெருகக்கடிகள் குறையும்.

தனுசு
இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

மகரம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

கும்பம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பம், தேவையற்ற கவலை உண்டாகும். வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

மீனம்
இன்று இல்லத்தில் தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். சுப முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் தீரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 13 =

Most Popular