Tuesday, November 7, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 12.05.2020

இன்றைய ராசிப்பலன் – 12.05.2020

மேஷம்
இன்று உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு பகல் 10.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று குழப்பத்துடன் இருப்பீர்கள். மதியத்திற்கு பிறகு மன அமைதி இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு பகல் 10.18 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

கடகம்
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். மன அமைதி ஏற்படும்.

சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சிக்கல்கள் தீரும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

கன்னி
இன்று பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன நிம்மதி ஏற்படும்.

தனுசு
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் புதிய முறையை கையாண்டு நற்பலனை அடைவீர்கள்.

மகரம்
இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழிலில் நற்பலனை தரும். உங்கள் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

கும்பம்
இன்று இல்லத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்தி கொள்வது நல்லது. வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி நிம்மதி ஏற்படும். கடன்கள் குறையும்.

மீனம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதால் பிரச்சினைகள் குறையும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − seven =

Most Popular