Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 15.06.2020

இன்றைய ராசிப்பலன் – 15.06.2020

மேஷம்
இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.

ரிஷபம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் இருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

கடகம்
இன்று தொழில் வியாபாரத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் சாதமான பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தூரப் பயணங்களில் கவனம் தேவை.

கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிட்டும். பொன் பொருள் சேரும்.

துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு கை, கால் வலி, சோர்வு போன்ற ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகி வருமானம் அதிகரிக்கும்.

தனுசு
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். மன நிம்மதி ஏற்படும்.

மகரம்
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.

கும்பம்
இன்று உங்களுக்கு பணபற்றாக்குறை ஏற்படலாம். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =

Most Popular