Wednesday, November 1, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 16.06.2020

இன்றைய ராசிப்பலன் – 16.06.2020

மேஷம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பண பிரச்சினைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். சுப காரியங்கள் கைகூடும்.

மிதுனம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

கடகம்
இன்று குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். சுப காரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சினைகள் குறையும்.

சிம்மம்
இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பணவரவு ஏற்பட்டு கடன் பிரச்சினை ஒரளவு குறையும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.

கன்னி
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அடுத்தவர்களை நம்பி எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருப்பது நல்லது.

துலாம்
இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் ரீதியான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிட்டும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும்.

தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும்.

மகரம்
இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.

கும்பம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

மீனம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 4 =

Most Popular