Monday, October 23, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 18.05.2020

இன்றைய ராசிப்பலன் – 18.05.2020

மேஷம்
இன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பெரியோர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பைத் தரும்.

ரிஷபம்
இன்று உத்தியோகத்தில் சிலருக்கு உயர் அதிகாரிகளால் பிரச்சினைகள் ஏற்படலாம். சுபகாரியங்களில் மந்த நிலை இருக்கும். தேவையற்ற செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். எதிர்பாராத உதவி மனமகிழ்வை அளிக்கும்.

மிதுனம்
இன்று உடன்பிறப்புகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். நண்பர்களால் சாதகமான பலனை அடைவீர்கள்.

கடகம்
இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். சுபகாரிய முயற்சிகளில் தாமதபலன் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். ஆன்மீக காரியங்களில் அதிக ஈடுபாடு உண்டாகும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. எந்த செயலிலும் கவனம் தேவை.

கன்னி
இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் சிறப்புடன் இருப்பார்கள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றங்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.

துலாம்
இன்று உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக இருந்த இடையூறுகள் சற்று விலகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். எதிர்பாராத உதவியால் கடன் பிரச்சினை குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் சற்று குறையும்.

தனுசு
இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய முயற்சிகளில் சாதகமான பலனை அடைவீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

மகரம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்
இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படலாம். புதிய முயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உற்றார் உறவினர்கள் மூலம் நல்லது நடக்கும்.

மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் புது புது வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =

Most Popular