Saturday, October 14, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 20.07.2020

இன்றைய ராசிப்பலன் – 20.07.2020

மேஷம்
இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புத்திர வழியில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.

மிதுனம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத வகையில் தனவரவு கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் மேன்மைகள் ஏற்படும். நவீன பொருட் சேர்க்கை உண்டாகும்.

கடகம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

சிம்மம்
இன்று உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

கன்னி
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். எதிர்பாராத உதவி கிட்டும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 3.28 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.

தனுசு
இன்று உங்கள் ராசிக்கு பகல் 3.28 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் தொடங்க உகந்த நாளாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சேமிப்பு உயரும்.

கும்பம்
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளி வட்டார நட்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வருமானம் பெருகும்.

மீனம்
இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வங்கி மூலம் உதவி கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 1 =

Most Popular