Thursday, October 19, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 26.04.2020

இன்றைய ராசிப்பலன் – 26.04.2020

மேஷம்
இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புகள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

மிதுனம்
இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கடகம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்க நல்ல நாளாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.

சிம்மம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி
இன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்ககூடும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்தல் இருந்து உதவி கிட்டும். மனதில் நிம்மதி குறையும்.

துலாம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் இருப்பீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

தனுசு
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்
இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படவேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.

கும்பம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன்& மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 2 =

Most Popular