மேஷம்
இன்று ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். கடன்கள் ஓரளவு குறையும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.
கடகம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.
சிம்மம்
இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல் நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கொடுக்கல்& வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறையும்.
விருச்சிகம்
இன்று தூர பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.46 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது.
தனுசு
இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோக ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து மன அமைதி ஏற்படும். நினைத்தது நிறைவேறும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அரசுத்துறை ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தூர பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
மீனம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பு மன நிம்மதியை தரும்.
