இன்றைய ராசி பலன்கள்

195

மேஷம்

பொருளாதார நிலை உயரும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளி களால் நன்மை வந்து சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

ரிஷபம்

பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். பிள்ளைகளின் நலனில் பெரிதும் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் மாற்றம் செய்ய புதுமுயற்சிகளை எடுப்பீர்கள்.

மிதுனம்

பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். வாகனத் தைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உடன் பணி புரிபவர்களால் ஏற்பட்ட உபத்திரங்கள் அகலும்.

கடகம்

திறமைகள் வெளிப்படும் நாள். மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதியைத் தரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி கைகூடும். உறவினர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்

அல்லல் அகலும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். பயணம் பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும். தொலைதூரப் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி

கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். நினைத்த காரியம் நல்லவிதமாக நடைபெறும். உடல் நலனில் கவனம் தேவை. தொழில் ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சினை ஏற்பட்டு அகலும்.

துலாம்

பக்குவமாகப் பேசிப் பாராட்டுக்களைப் பெறும் நாள். உத்தியோக முன்னேற்றம் கருதி ஊர்மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

விருச்சிகம்

சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி யைத் தரும். சொத்துகளால் லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

தனுசு

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் யோகம் உண்டு. பணவரவு திருப்தி தரும்.

மகரம்

காலையில் சலசலப்பும், மாலையில் கலகலப்பும் ஏற்படும் நாள். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள். வீடுகட்டும் பணி பாதியிலேயே நிற்கும்.

கும்பம்

வரவு திருப்தி தரும் நாள். பிரிந்து சென்ற வர்கள் பிரியமுடன் வந்திணைவர். எதிரிகள் உதிரியாவர். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும்.

மீனம்

விரயங்கள் மேலோங்கும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பிறகு வருத்தமடைவீர்கள். மருத்துவச் செலவு உண்டு. குழப்பங்கள் குறைய குலதெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.