இன்றைய ராசி பலன்கள்

482

மேஷம்

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பழைய நண்பர்களின் மூலம் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

ரிஷபம்

உறவினர் வருகையால் உற்சாகம் காணும் நாள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். தேக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொலைபேசி வழிச் செய்திகளால் பகையொன்று நட்பாகும்.

மிதுனம்

சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். சந்தோஷம் அதிகரிக்கும். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். வியாபாரத்தை விரிவு செய்யும் எண்ணம் மேலோங்கும்.பணவரவு திருப்தி தரும்.

கடகம்

குடும்பத்தில் குதூகலம் கூடும் நாள். பொது நல ஈடுபாட்டால் புகழ் காண்பீர்கள். உடன் பிறப்புகள் உறுதுணைபுரிவர். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

சிம்மம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பெரியவர்களின் வாழ்த்துக்களைப் பெற்று மகிழ்வீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

கன்னி

கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.

துலாம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நல்லவிதமாக நடைபெறும். புண்ணிய காரியங்களுக்காக சிறிது தொகையை செலவிட்டு மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

சந்தோஷம் கூடும் நாள். சந்தித்த நண்பர்கள் மூலம் தொழில் வளர்ச்சி ஏற்படும். ஆன்மிகப் பயணம் ஒன்றை மேற்கொள் வீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி யைத் தரும். வருமானம் திருப்தி தரும்.

தனுசு

கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும். அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

மகரம்

விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு, இடம் விற்பதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும். பிள்ளைச் செல்வங் களால் பெருமை வந்து சேரும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.

கும்பம்

ஆற்றல்மிக்கவர்களைச் சந்தித்து ஆனந்த மடையும் நாள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள். திருமண வாய்ப்புகள் தேடி வரும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

மீனம்

நம்பிக்கைகள் நடைபெற நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். பிரியமான சிலரிடம் யோசித்துப் பேசுவது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படலாம். விரயங்கள் கூடும்.