இன்றைய ராசி பலன்கள்

349

மேஷம்

சிந்தனைகள் வெற்றி பெற வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் பிரச்சினை உண்டு. மாமன், மைத்துனர் வழியில் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை.

ரிஷபம்

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும். அந்நிய தேசத் தொடர்பால் அனுகூலம் காண்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

மிதுனம்

கடன்சுமை குறையும் நாள். கனவு பலிதமுண்டு. நல்லவர்களின் தொடர்பு கிடைத்து மகிழ்வீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். பிள்ளைகளால் உதிரிவருமானங்கள் உண்டு. சொத்துத் தகராறுகள் அகலும்.

கடகம்

இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங் கள் உண்டு. இடம், பூமி வாங்கிச் சேர்க்க அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும்.

சிம்மம்

வழக்குகளில் வெற்றி கிடைக்கும் நாள். வரவு திருப்தி தரும். உன்னதமான வாழ்விற்கு உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

கன்னி

நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். வீண் செலவுகள் குறையும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைவீர்கள்.

துலாம்

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்தது நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வீடு, இடம் வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

விருச்சிகம்

பணவரவு திருப்தி தரும் நாள். பயணங் களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சொத்து சேர்க்கை சம்மந்தப்பட்ட வகையில் நல்ல முடிவு எடுப்பீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

தனுசு

இடமாற்றத்தால் இனிய மாற்றம் காண வேண்டிய நாள். திடீர் செலவுகள் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளிடம் சில குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். புகழ் பெற்றவர்களின் சந்திப்பால் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வீர்கள்.

மகரம்

உள்ளம் மகிழும் தகவல் கிடைக்கும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பணத்தேவைகள் எதிர்பார்த்ததை விட இருமடங்காக வந்து சேரலாம். தொழிலை விரிவுபடுத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும். புது முயற்சிகள் கைகூடும்.

கும்பம்

வளர்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். கட்டிடப் பணி தொடரும். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்புக் கொடுப்பர். உங்களின் நிர் வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.

மீனம்

செல்வ வளம் பெருகும் நாள். திடீர் பயணங்கள் ஏற்படும். உறவினர்களின் வருகை உண்டு. உத்யோகத்தில் உயர் பதவி வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.