மேஷம்
குடும்பச் சுமை கூடும் நாள். அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
ரிஷபம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்கள் கூடும். பயணங் களைத் தள்ளிவைப்பீர்கள்.
மிதுனம்
எண்ணங்கள் ஈடேறும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
கடகம்
சச்சரவுகள் அகலும் நாள். கொடுக்கல்– வாங்கல்கள் ஒழுங்காகும். காலை நேரம் கலகலப்பாக அமையும். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
சிம்மம்
நீண்டநாளைய ஆசை நிறைவேறும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்களின் உதவியோடு தொழிலில் அதிக முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும்.
கன்னி
பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். இடமாற்றம், வீடுமாற்றங்கள் பற்றிச் சிந்திப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.
துலாம்
வரவும், செலவும் சமமாகும் நாள். குடும்பத்தில் அமைதி கூடும். அரசியலில் ஈடு பாடு அதிகரிக்கும். தந்தைவழியில் ஆதாயம் உண்டு. வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிட்டும்.
விருச்சிகம்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். பொருள்வரவு கூடும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பக்கத்து வீட்டாருடன் இருந்த பகை மாறும். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்க முன்வருவீர்கள்.
தனுசு
வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
மகரம்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும்.
கும்பம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதிக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். இடமாற்றம், ஊர்மாற்றங் கள் எதிர்பார்த்தபடி அமையும்.
மீனம்
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்
