மேஷம்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சி கூடும் வாய்ப்பு களை உபயோகப்படுத்திக் கொள்வீர்கள். முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத் துதவுவர். பயணங்களால் பலன் கிடைக்கும்.
ரிஷபம்
விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
மிதுனம்
நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படலாம். அலுவலகப் பணிகளில் சிறு சிறு அல்லல்கள் ஏற்பட்டு அகலும். மருத்துவச் செலவு உண்டு.
கடகம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். நாணயத் தைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் வருகை உண்டு.
சிம்மம்
பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். எதிர்பாராத தனலாபம் இல்லம் வந்து சேரும். குடும்பத்தினர்களின் குறைகள் தீர வழிவகுப்பீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
கன்னி
உள்ளம் மகிழும் தகவல் இல்லம் தேடி வரும் நாள். உத்தியோக அனுகூலம் ஏற்படும் நாள். உயரதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள்.
துலாம்
பொதுவாழ்வில் பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டிய நாள். பொருளாதார நிலையை உயர்த்த புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். நேற்று செய்யாமல் விட்ட வேலையொன்றை இன்று செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்
யோகமான நாள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். அருகில் இருப்ப வர்களால் ஆதாயம் உண்டு.
தனுசு
உறவினர்கள் வருகையால் உள்ளம் மகிழும் நாள். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் சிலர் உங்களுக்காகச் செலவு செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.
மகரம்
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். ஊர் மாற்றம், இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
கும்பம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் வழியில் சுபச் செய்திகளைக் கேட்டு மகிழ்வீர்கள்.
மீனம்
மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்துதவுவர். தாய்வழி ஆதரவு உண்டு. செலவுகளைச் சமாளிக்க நேற்றைய சேமிப்பு கைகொடுக்கும்.
