Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 14.07.2020

இன்றைய ராசிப்பலன் – 14.07.2020

மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ரிஷபம்
இன்று நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய நாளாகும். பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். வீட்டு தேவைகள் பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். உடன்பிறந்தவர்களால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் கவனம் தேவை.

மிதுனம்
இன்று வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். செய்யும் வேலைகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

கடகம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் சேரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

சிம்மம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று காலதாமதமாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பணியாட்களின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம்.

கன்னி
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.

துலாம்
இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிட்டும். திடீர் பணவரவு உண்டாகும்.

விருச்சிகம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

தனுசு
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மகரம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பாராத மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். தொழில் ரீதியான பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

கும்பம்
இன்று உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலமான பலன்கள் கிட்டும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

மீனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் கணவன் மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துகளால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =

Most Popular