Tuesday, November 7, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிபலன் 10 - 3 - 2021

இன்றைய ராசிபலன் 10 – 3 – 2021

மேஷ ராசி

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்கள் பிள்ளைகளால் பெருமை. தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றியைத் தரும் .

ரிஷப ராசி

இன்று வியாபாரத்தில் உங்கள் கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணவரவு சுமாராக இருக்கும். கொடுக்கல்-வாங்கலில் இழுபறி உண்டாகும் .உங்களின் அனைத்து தேவைகளும் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுங்கள். நண்பர்களின் ஆதரவும் உண்டு.

மிதுன ராசி

இன்று டென்ஷன் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். உங்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.

கடக ராசி

நீங்கள் நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். பிள்ளைகளிடமிருந்து கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய ஒப்பந்தங்கள் தொழில் வியாபாரங்களில் கையெழுத்தாகும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.

சிம்ம ராசி

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களின் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவார்கள். தொழில்ரீதியாக அனைத்தும் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்.

கன்னிராசி

உங்கள் வேலையில் தேவையில்லாத அலைச்சல் மற்றும் மன உளைச்சல் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். எல்லோரையும் அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இருந்து வந்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள் .

துலாம் ராசி

எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்ற சூழல் உருவாகும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

விருச்சக ராசி
உறவினர்கள் வருகையால் வீட்டில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். நீங்கள் மன உறுதியுடன் எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள். புதிய நட்புகள் உருவாகும் . உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களில் லாபம் உண்டாகும் .வியாபாரம் அமோகமாக இருக்கும். உங்களின் சேமிப்பு இன்று உயரும்.

தனுசு ராசி

உறவினர்களால் இன்று அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாக வாய்ப்பு ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நீங்கள் சிந்தித்து செயற்படுவதன் மூலம் வீண் செலவுகளை குறைக்கலாம். உபயோகத்தில் இன்று நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மகர ராசி

உத்தியோகத்தில் வேலை பளு சற்று குறையும். உறவினர்களால் மனக்கசப்பு ஏற்படலாம். உங்கள் குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும் வாய்ப்பு உண்டு. விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நீங்கள் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு. உத்தியோகத்தில் வேலை பளு சற்று குறையும்.

கும்ப ராசி

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் குடும்பத்தினரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும் .

மீன ராசி

இன்று உங்கள் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும் . உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலில் புதிய உத்திகளை பயன்படுத்தி அதிக லாபம் அடைவீர்கள். சகோதரிகள் மூலம் உங்களுக்கு இன்று அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் இன்று மிகவும் சிறப்பாக இருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 14 =

Most Popular