Monday, October 23, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

நந்தி வழிபாட்டால் நன்மைகளை வர வழைத்துக் கொள்ள வேண்டிய நாள். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். நீண்ட தூரப் பயணங்கள் நினைத்த பலனைத் தேடித்தரும்.

ரிஷபம்

ஆனந்தம் கூட ஆலயவழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். நிதி நிலை உயரும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். பொதுவாழ்வில் ஈடுபட்டு புகழ் சேர்ப்பீர் கள். கல்யாண கனவுகள் நனவாகும்.

மிதுனம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்கத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் உண்டு.
கடகம்

இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். விரயங்கள் ஏற்படாதிருக்க எதையும் யோசித்து செய்வது நல்லது. உதாசீனப் படுத்தியவர்கள் உங்களை தேடி வருவர். தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படலாம்.

சிம்மம்

லாபம் அதிகரிக்கும் நாள். அரசியல் வாதிகளால் அனுகூலம் கிட்டும். வீட்டிற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் இனிமை யாக வழிவகுத்துக் கொள்வீர்கள்.

கன்னி

எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றிகாணும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.

துலாம்

தடைகள் அகலும் நாள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும்.

விருச்சிகம்

நினைத்தது நிறைவேற நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நந்தீசர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு

உறவினர் வருகையால் உள்ளம் மகிழும் நாள். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணை வழியே வந்த பிரச்சினை தீரும். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

மகரம்

சிவாலய வழிபாட்டால் சிறப்புகளை காண வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்றார், உறவினர்கள் கைகொடுத்துதவ முன்வருவர். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட பகை மாறும்.

கும்பம்

அதிர்ஷ்டமான நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிட்டும்.

மீனம்

உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வரவு திருப்தி தரும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். வீடு கட்டும் பணியை தொடர நினைப்பீர்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × two =

Most Popular