இன்றைய ராசி பலன்கள்

376

மேஷம்

வெற்றிச் செய்திகள் வீடு தேடி வந்து சேரும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பால் வியா பார விருத்தியைக் காண்பீர்கள். நீண்ட நாளைய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும். வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்

நினைத்தது நிறைவேறும் நாள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பெற்றோர் வழியில் பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும். வாகன பழுதுகளை சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் முன்னேற்றம் கூடும்.

மிதுனம்

மதிப்பும், மரியாதையும் கூடும் நாள். இல்லத்தில் இனிய காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். கொள்கைப்பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும்.

கடகம்

எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படும் நாள். எந்த வொரு காரியத்தையும் யோசித்து நிதானமாகச் செய்வது நல்லது. வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தாருடன் வெளியிடங் களுக்குச் செல்லும்போது கவனம் தேவை.

சிம்மம்

நினைத்தது நிறைவேறும் நாள். நீங்கள் தேடிச் செல்ல நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். தொழில் ரகசியங்களை வெளி யில் சொல்லாதிருப்பது நல்லது. விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.

கன்னி

வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிரியமான சிலரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத தனலாபம் இல்லம் வந்து சேரும்.

துலாம்

திறமை பளிச்சிடும் நாள். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் கை கூடிவரும். வீடு கட்டும் பணி அல்லது கட்டிய வீட்டை பழுது பார்க்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும்.

விருச்சிகம்

நினைத்தது நிறைவேறும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்துதவுவர். உறவினர்கள் வருகை உண்டு. பயணம் பலன்தரும்.

தனுசு

நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகம், தொழிலில் மேலதி காரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். .

மகரம்

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். வியா பார விருத்திக்காக முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். நீண்ட நாளைய பிரச்சினையொன்று சுமுகமாக முடியும். குடும்பச்சுமை கூடும். நிழல் போல தொடர்ந்த கடன் சுமை குறையும்.

கும்பம்

காரிய வெற்றிக்கு கணபதியை வழிபட வேண்டிய நாள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதால் சிலரின் அதிருப்திக்கு ஆட்படலாம். உதவி செய்வதாய் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.

மீனம்

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வீடு இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வரவு திருப்தி தரும்.