இன்றைய ராசி பலன்கள்

389

மேஷம்

சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள். வரவிற்கேற்ற செலவு உருவாகும். பெற்றோர்களின் பிரியம் கூடும். பொருளாதார முன்னேற்றம் உண்டு.

ரிஷபம்

நல்ல தகவல்கள் நாடி வரும் நாள். தொலை தூரத்திலிருந்து வரும் தகவல்களால் தொல்லைகள் தீரும். தொழிலை விரிவு படுத்த எடுத்த முயற்சி வெற்றி பெறும். இடம் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.

மிதுனம்

போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும் நாள். புதிய நண்பர்களின் சந்திப்பால் நன்மையுண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வீடுமாற்றம் ஏற்படலாம்.

கடகம்

உற்சாகம் அதிகரிக்கும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்ட மிட்டபடியே நிறைவேறும். தொழிலுக்காக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

நல்ல வாய்ப்புகள் வந்து சேரும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வரும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபார நலன் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

கன்னி

அந்தஸ்து உயரும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங் கும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. மாற்றினத்தவர்களின் உதவியால் மகிழ்ச்சி காண்பீர்கள்.

துலாம்

விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். நீங்கள் தேடிச் செல்ல நினைத்த ஒருவர் உங்கள் இல்லம் தேடி வருவார். உடல்நலனில் கவனம் தேவை.

விருச்சிகம்

பாராட்டும், புகழும் கூடும் நாள். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வி.ஐ.பி.க்களின் வருகை உண்டு.

தனுசு

பணப்பற்றாக்குறை அகலும் நாள். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங் கள் அகலும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். தொழில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்து கொள்வர்.

மகரம்

பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டிய நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்வர். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

கும்பம்

எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நாள். உடல் நலத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு அகலும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக் கும். விரயம் உண்டு.

மீனம்

சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கூடும் நாள். கடன்சுமை குறையப் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். வெளியூர்ப்பயணங் களால் வியக்கும் செய்தி வந்து சேரும்.