Thursday, October 19, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 04.06.2020

இன்றைய ராசிப்பலன் – 04.06.2020

மேஷம்
இன்று நீங்கள் சற்று குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பகல் 1.07 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடை பிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் ஆதரவு மன நிம்மதியை தரும்

ரிஷபம்
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்
இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சிலருக்கு வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கன்னி
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

துலாம்
இன்று குடும்பத்தில் வரவிற்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக செல்லும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். கடன்கள் குறையும்.

தனுசு
இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்களின் செயல்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். நினைத்த காரியம் நிறைவேறும். சுபகாரியம் கைகூடும்.

கும்பம்
இன்று வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியை தரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

மீனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 1.07 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. உங்களுக்கு இருந்த பொருளாதார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =

Most Popular