Thursday, October 19, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 19.06.2020

இன்றைய ராசிப்பலன் – 19.06.2020

மேஷம்
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நணபர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

மிதுனம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனை நற்பலனை கொடுக்கும். வருமானம் பெருகும்.

கடகம்
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வரும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கன்னி
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

துலாம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

விருச்சிகம்
இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கடன் பிரச்சினைகள் தீரும்.

தனுசு
இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.

மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.

கும்பம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் மனஉளைச்சலை கொடுக்கும். உறவினர்கள் ஓரளவிற்கு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 6 =

Most Popular