Wednesday, October 18, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 06.05.2020

இன்றைய ராசிப்பலன் – 06.05.2020

மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு நன்றாக இருக்கும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். நல்ல நட்பு ஏற்படும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதாரநிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகலாம். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான நிலை ஏற்படும்.

கடகம்
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை தரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் எமையும் எதிர் கொள்ள முடியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்
இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல நிலையும் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

கன்னி
இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. கொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

விருச்சிகம்
இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

மகரம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

கும்பம்
இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் ரீதியாக மதி நுட்பத்துடன் செயல்பட்டால் அனுகூலம் அடையலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும்.

மீனம்
இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =

Most Popular