Thursday, October 19, 2023
HomeArthamulla Aanmeegam16 வகை லட்சுமிகள்

16 வகை லட்சுமிகள்

நம் வீட்டிற்கு வரவேண்டும் அருள் தரவேண்டும் .

1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக் கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே !
துர்க்காயை ச தீமஹி !
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !!

மனிதனின் வாழ்க்கைத்தேவை அருளோடு வரும் பொருள்வளம் கொடுப்பவளான திருமகள் அஷ்டலக்ஷ்மிகளாக வணங்கப்படுகிறாள் .

சைவசமயமும் .. சாக்தசமயமும் அன்னைக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பிக்கிறதோ அதே அளவு ஸ்ரீவைஷ்ணவமும் தாயாருக்கு சிறப்பிடம் கொடுக்கிறது சைவத்தில் நவசக்தியாக வழிபடப்படும் தேவி .. வைஷ்ணவத்தில்,

🌺 ஆதிலக்ஷ்மி ..

🌺 தனலக்ஷ்மி ..

🌺 தானியலக்ஷ்மி ..

🌺 சந்தானலக்ஷ்மி ..

🌺 மஹாலக்ஷ்மி ..

🌺 கஜலக்ஷ்மி ..

🌺 விஜயலக்ஷ்மி ..

🌺 வீரலக்ஷ்மி

என்ற அஷ்டலக்ஷ்மிகளாக போற்றி வணங்கப்படுகிறாள்

அன்னை ஒன்பதுவடிவமாக அன்பர்களால் பார்க்கப்படுகிறாள். அன்னையின் இந்த ஒன்பது வடிவங்களுக்கும் தனித்தனி தத்துவங்கள் உள்ளன ..

1 – முதலாவது உருவம் – “

மனோன்மணியாகும் ” .. இதன் தத்துவம் – பக்குவப்பட்ட ஜீவாத்மாக்களின் பாவங்களை கழுவி .. களைந்து .. பரமாத்மாவோடு இணைப்பதாகும் ..

2 – இரண்டாவதாக சொல்லப்படும் உருவம் -“ சர்வபூதாமணி “ என்ற உருவத்தோற்றம் உயிர்களோடு ஒன்றி கலந்து அதன் பாவங்களை விலக்குவதாகும் ..

3 – மூன்றாவது – பூமியில் விஷக்கிருமிகள் பெருகாமல் சூரியசக்தியால் நல்லவைகளை வளரச்செய்யும் “ பலபிரதமணி “ உருவமாகும் ..

4 – நான்காவது – சந்திரனில் இருந்துகிடைக்கும் காந்தசக்தியைக் கொண்டு பயிர் பச்சைகளை .. உயிர் இனங்களை தழைத்தோங்கச்செய்யும் “ பலவிகரணி “ வடிவாகும் ..

5 – ஐந்தாவதாக – வானத்தில் உள்ள எல்லா பொருட்களையும் ஏற்று நின்று அவைகள் தன்னில் கலக்கசெய்யும் “ கலவிசரணி “ உருவமாகும் ..

6 – ஆறாவதாக – காற்றில் பிரணவமாய் நிற்கும் “ காளி “

7 – ஏழாவதாக – நெருப்பில் வெப்பமாய் நின்று உயிர்வளரச்செய்யும் “ ரௌத்ரி “

8 – எட்டாவதாக – தண்ணீரில் குளிர்ச்சியையும் .. ஜீவசக்தியையும் நிலைபெற செய்யும் “ சேஸ்றா “ ..

9 – ஒன்பதாக – ஐம்பூதங்களையும் ஆட்சிசெய்யும் “ வாமை “

இந்த நவசக்தியரைக் குறிக்கும்வகையில்தான் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனித பொருட்களான,

வெற்றிலை
பாக்கு
மஞ்சள்
குங்குமம்
அட்சதை
சீப்பு
தோடு
கண்ணாடி வளையல்கள் ..
ரவிக்கை ..

ஆகிய 9 பொருட்களையும் தட்சிணையுடன் வைத்து கொடுத்து அன்னமிடுகிறார்கள் ..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =

Most Popular