ஆடி 1 – அமாவாசை: அளவற்ற புண்ணியம் தரும் முன்னோர் வழிபாடு!
ஆடி 1 ஆம் தேதி அதாவது ஜூலை 17, மட்டும் என்ன அவ்வளவு விசேஷம் என்றால் அது தான் ஆடி அமாவாசை: அளவற்ற புண்ணியம் தரும் முன்னோர் வழிபாடு….
ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வரும். அமாவாசை நாளை திங்கட்கிழமை ஆடி 1 ஆம் தேதி அதாவது ஜூலை 17, ஆடி 31 – ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஏற்படுகிறது. தட்சிணாயன காலத்தின் முதல் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பித்ரு கடன் கொடுத்தால் அது நேரடியாக அவர்களை சென்றடையும் என்பது நம்பிக்கை.
ஒரே மாதத்தில் 2 அமாவாசைகள் வரும் மாதத்தை மலமாதம் என்று ஜோதிடம் கூறுகிறது. இந்த மாலமாதத்தில் வீடுபேறு, நிச்சயதார்த்தம், திருமணம், தொழுவம் அமைத்தல், புதிய கிணறு வெட்டுதல் போன்ற சுப காரியங்களைச் செய்வதில்லை. ஆடி மாதம் என்பதால் திருமணமோ, கிரகப் பிரவேசமோ செய்ய மாட்டார்கள். எனவே இம்மாதத்தில் சுப காரியங்களை செய்ய முடியவில்லையே என்ற கவலை தேவையில்லை.
ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பையும் முக்கியத்துவம் பெறும்.
ஆடி அமாவாசை 2023 தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்:
தர்ப்பணத்திற்கு உகந்த நேரம் என்னவென்றால், அதிகாலையில் இருந்து உச்சி வேலையான 12 மணிக்கு முன்பே கொடுத்திட வேண்டும். விரத சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பது மதியம் 2 மணிக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பரிபூரணமாக அவர்களுக்கு சென்றடையும்.
முன்னோர் வழிபாடு மகத்தான ஒன்று. நம் ஞானநூல்கள் பலவும் நமக்கான பலவகைக் கடமைகளைச் சுட்டிக்காட்டி, அவசியம் அவற்றைச் செய்யும்படி பணிக்கின்றன. அவற்றில் முன்னோர் வழிபாடும் ஒன்று. திதி கொடுப்பது மற்றும் அமாவாசை தர்ப்பணம் அளிப்பது முன்னோரின் ஆசியையும் அருளையும் பெற்றுத் தரும்.
நம் முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வதால், எள்ளும் தண்ணீரும் அளிப்பதால், நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் விளக்குகிறது. பித்ருக்களை நினைத்து நாம் செய்யும் தர்ப்பண பூஜைகள் நமக்குப் பொருளையும், ஆயுளையும், சுவர்க்கப் பேறு முதலான சுப பலன்களையும் கொடுக்கும். பகைவர்களை ஓடச்செய்து, நமது குலத்தைத் தழைத்தோங்கச் செய்யும்.
முன்னோர் ஆராதனைக்கு உகந்த நாள் அமாவாசை. சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை. இதை முழுமைப் பெற்ற நாள் என்பார்கள் பெரியோர்கள். சந்திரன் தேய்பிறையிலிருந்து விடுபட்டு வளர்பிறைக்குச் செல்லும் நாள் என்பது சிறப்பு. ஆக, இந்த நாளில் முன்னோர் வழிபாட்டைச் செய்யலாம். அதிலும் குறிப்பாக வருடத்தில் மூன்று அமாவாசைகள்… தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.
தேவகணங்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக உத்தராயனமும், பித்ருக்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக தட்சிணாயனமும் திகழும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவற்றில் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வருவது ஆடி அமாவாசை.
ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பையும் முக்கியத்துவம் பெறும். ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு பக்தரர்கள் பலரும் கோயில்களில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
ஆடி அமாவாசை என்றால் என்ன?
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் ஒன்று சேரும் புனிதமான நாள் அமாவாசையாகும். இந்த நாட்களில் முன்னோர்களையும் இறந்த தாய், தந்தையர்களை நினைத்து ‘திதி கொடுப்பது நல்லதாக பார்க்கப்படுகிறது. இந்த தினத்தில் நீர் நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி, மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுப்பார்கள்.
முன்னோர்களுக்கு திதி:
ஆடி அமாவாசை அன்று செய்ய வேண்டியவை:
- ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
- பின்பு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.
- வீட்டில் இருக்கும் பெண்கள் காலை சாப்பிடாமல் விரதம் இருந்து முன்னோர்களுக்கு பிடித்தமான உணவை சமைத்து பெரியவர்களை அழைத்து சாப்பாடு அளிக்க வேண்டும்.
- இப்படி செய்தால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
- முன்னோர்களையும், தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுத்து, புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபட்டு சிறப்பு பூஜைகள்செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் ராமேசுவரம், வேதாரண்யம், திருவையாறு, கோடியக்கரை, பவானி, திருச்சி அம்மா மண்டபம், திலதர்ப்பணபுரி ஆகிய இடங்களில் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் ஆடி அமாவாசை வழிபாட்டில் திரளான மக்கள் கலந்துக் கொண்டு தங்களின் முன்னோர்க்கு திதி கொடுத்து வருகின்றனர்.
ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து, முன்னோர்கள் வழிபாடு செய்வது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த தடைகள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்பது ஐதீகம். பித்ரு லோகத்தில் இருக்கும் ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள், ஆடி அமாவாசை அன்று பூமிக்கு வருகிறார்கள். எனவே, அமாவாசை என்று, பித்ருக்களை வழிபாடு செய்து, ஆசி பெறுவது வாழ்வை பல விதங்களில் மேம்படுத்தும்.
ஆடி அமாவாசை தர்ப்பணம் எப்படி செய்ய வேண்டும்?
சிரத்தையும் (மிகுந்த அக்கறையுடன்) நாம் செய்யும் காரியம் தான் சிரார்த்தம் என்று மருவி உள்ளது. எனவே, இந்த நாளில் மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் அனைத்து காரியங்களை செய்ய வேண்டும்.
பொதுவாக தர்ப்பணம் அல்லது இறந்தவர்களுக்கு பித்ரு காரியங்களை நீர் நிலைகளின் அருகில் செய்வார்கள். ஆடி அமாவாசை அன்று, ஆறு, கடல், குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் பித்து காரியம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதும்.
குறிப்பாக, பித்ரு காரியம் செய்ய, முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையச் செய்யும் புண்ணிய ஸ்தலங்களான காசி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கானவர்கள் அலைமோதுவார்கள். ஆனால், அந்த இடங்களுக்கு செல்ல முடியாதவர்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் நீர் நிலைகள் அல்லது வீட்டிலேயே கூட அமாவாசை தர்ப்பணம் செய்யலாம்.
வீடு முழுவதையும் தண்ணீர் விட்டு கழுவி, சுத்தம் செய்து, பூஜையறையில் சுவாமி படங்களை துடைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, அலங்கரிக்க வேண்டும். முதல் நாளே, இதை செய்து விட வேண்டும்.
நீர் நிலைகளில் கூட்டாக தர்ப்பணம் செய்ய வாய்ப்புள்ளவர்கள், மற்றவர்களுடன் சேர்த்து, பித்ருக்களை வேண்டி தர்ப்பணம் செய்து முடிக்கலாம். இல்லையென்றால், வீட்டில் புரோகிதரை வரவழைத்து தர்ப்பணம் செய்யலாம். தர்ப்பணம் செய்ய முடியவில்லை என்னும் பட்சத்தில், உணவு சமைத்து அன்னதானம் செய்யலாம்.
இறந்த முன்னோர்களில் பெண்கள் சுமங்கலியாக இறந்திருந்தால், சுமங்கலிப் பெண்களை சாப்பிட வரவேற்று, உணவு பரிமாறி, அவரவருக்கு இயன்ற வகையில் சேலை, மஞ்சள், குங்குமம் வழங்கி வழிபட்டு முன்னோர்களின் ஆசி பெறலாம்.
குழந்தைகள் தவிர்த்து, வீட்டில் உள்ள பெரியவர்கள் தலைக்குக் குளிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னர், உங்கள் மூதாதையருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைக்க வேண்டும். எத்தனை நபர்களை வணங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு தனித்தனியாக வாழை இலையில் உணவு பரிமாறி படைக்கலாம், அல்லது பெரிய தலைவாழை இலையில் அனைத்து உணவுகளையும் பரிமாறி படைக்கலாம்.
முன்னோர்களுக்கு உணவைப் படைக்கும் முன்பு, யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். அல்லது உணவு படைக்கும் வரை சாப்பிடாமல் இருந்து, விளக்கேற்றி, கற்பூர ஆராதானை செய்து பின்னர் சாப்பிடலாம்.
காகமும் முன்னோர்கள் ஆசீர்வாதமும்:
காகம் என்பது முன்னோர்களின் அம்சமாகக் கருதப்படுகிறது. எனவே, வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் முன்பு, உணவை காகத்துக்கு படைக்க வேண்டும். சாதம், காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நெய் சேர்த்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள்/காகம் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால், முன்னோர்கள் சாப்பிட வந்துள்ளார்கள், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. இதனால், தோஷங்கள் நீங்கி, வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.
மேலும், காகம் சனீஸ்வரரின் வாகனம் ஆகும். எனவே, சனி தோஷம் நீங்கும் என்பதும், ஏழரைச் சனி, அஷ்டம சனியின் தாக்கம் குறையும் என்பதும் நம்பிக்கை. காகம் வரவில்லை என்றாலோ, அல்லது உணவை சாப்பிடவில்லை என்றாலோ, உங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் ஏதோ குறையுடன் இருப்பதாக கருதப்படுகிறது.
தானமாக என்ன கொடுக்கலாம்?
பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் போது, அவரவரால் இயன்ற அளவுக்கு, உணவு, ஆடை, உள்ளிட்டவற்றை தானமாக வழங்கலாம். சிலர், கால்நடைகளுக்கு உணவுகளை தானமாக வழங்குவர். ஆனால், அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. மேலும், அரிசி, தானியங்கள் தானம் செய்தால் மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆடி அமாவாசை 2023 தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்:
தர்ப்பணத்திற்கு உகந்த நேரம் என்னவென்றால், அதிகாலையில் இருந்து உச்சி வேலையான 12 மணிக்கு முன்பே கொடுத்திட வேண்டும். விரத சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பது மதியம் 2 மணிக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பரிபூரணமாக அவர்களுக்கு சென்றடையும்.
தானம்:
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அமாவாசை நாளில் வெண்கலப் பாத்திரத்தில் சுத்தமான நெய்யை தானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் எல்லா விதமான நோய்களும் விலகும் என்பது நம்பிக்கை. முன்னோர்களை வழிபட்ட பின் ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் வழங்குவது சிறப்பு. அமாவாசை நாளில் ஏழை, எளியோர், பசியால் வாடுபவர்களைத் தேடி அன்னதானம் செய்யுங்கள். நமது வழிபாடும், தொண்டும் அகம் இருந்தால், முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக அமையும்.
