ஆலிலையில் ஸ்ரீகிருஷ்ணர் காலின் கட்டை விரலை வாயில் வைத்திருப்பது ஏன்?

41

தாவரங்களில் ஆல மரம் சிறந்ததாக காணப்படுகிறது.
இதனை வட விருட்சம் என்று அழைப்பார்கள்.
ஆலமரத்தின் கீழே தட்சிணா மூர்த்தி அமர்ந்து ஞானத்தை போதிக்கிறார்.
ஆல இலைக்கு ஜீவ சாரம் மிகவும் அதிகம்.
அதனால்தான் அது எத்தனை வாடினாலும் மற்ற இலைகள் மாதிரி வற்றிப்போய் நொறுங்குவதில்லை!
தண்ணீர் கொஞ்சம் தெளித்தால் போதும், மறுபடியும் பசுமை பெற்று விடும்.
ஸ்ரீகிருஷ்ணர் ஆலிலைமேல் பாலகிருஷ்ணனாக காட்சிதந்து, மார்க்கண்டேயருக்கு ஞானத்தை அளித்தார்.
சம்சார சாகரத்தில் அலையாய் அலைகின்ற நமக்கு ஆல் இலையை படகாகக்காட்டி நிலையான நித்திய தத்துவத்தை உணர்த்துகிறார் ஸ்ரீகிருஷ்ணர்!
காரணம் 1
குழந்தை கிருஷ்ணர் தன் கால் பெருவிரலை சுவைத்த விஷயம் என்றும் பதினாறு வயது கொண்ட மார்க்கண்டேய மகரிஷிக்கு தெரிய வந்தது.
ஏன் இப்படி செய்கிறார் என்று அறியும் ஆசையில் அவரைப் பார்க்க புறப்பட்டார்.
ஆனால் மாயக்கிருஷ்ணன் பலத்த மழை பெய்யச் செய்தார். ஆஸ்ரமத்தைச் சுற்றி கடும் வெள்ளம் சூழ்ந்தது.
ஆனால் மார்க்கண்டேயருக்கு தான் மரணமே கிடையாதே எனவே அவர் தண்ணீரில் குதித்தார்.
நீரில் மிதந்தார்.
வேறு வழியின்ரி கிருஷ்ணர் ஒரு ஆலிலையில் சயனித்தபடியே அங்கு மிதந்து வந்தார்.
கட்டை விரல் வாயில் இருந்தது.
“ கிருஷ்ணா உன் கட்டை விரலை சுவைக்க காரணம் என்ன என தெரிந்து கொள்ளலாமா“ என்றார். “
மகரிஷியே என் பக்தர்களில் பலரும் எனது திருவடிகளை அடைய வேண்டும் என்றே பிரார்த்திக்கின்றனர்.
அப்படி அந்த திருவடிகளில் என்னதான் விசேஷம் இருக்கிறது என்று அறியும் ஆர்வம் எனக்கும் வந்து விட்டது. அதனால் தான் கால்பெருவிரலை சுவைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் “ என்றார் சேஷ்டையான கண்ணன் தான்.
காரணம் 2
மாந்தாதா என்ற சூரிய வம்சத்து ராஜா பிறந்த போது பால் கொடுப்பதற்கு அன்னை இல்லாததால் அழுது கொண்டிருந்தார். இதனை கண்ட இந்திரன் மனமிரங்கி, “நான்கொடுக்கிறேன் மாந்தாதா” என்று சொல்லி குழந்தையின் கை கட்ட விரலை எடுத்து வாயினுள் வைத்தார். மனித சரீரத்தில் ஒவ்வொரு அங்கத்திலும் ஒரு தேவதை வசிக்கிறது. அதில் கைக்குரிய தேவதை இந்திரன். தான் சாப்பிடும் அமிர்தத்தை கையின் கட்டை விரலின் மூலம் குழந்தையின் வாய்க்கு போகும்படி இந்திரன் அனுக்கிரஹம் செய்தார். அதனால்தான் அநேக குழந்தைகள் பசியின்போது வாயில் விரல் இட்டுக்கொள்கிறது.
ஆனால் இங்கு ஸ்ரீகிருஷ்ணர் வாயில் போட்டுக் கொண்டிருப்பது கை கட்டை விரல் அல்ல. கால் கட்டை விரலை! அவரது சரீரம் முழுவதும் அமிர்த மயமாக இருப்பதால், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் அவரை ‘அமிர்த வபு’ என்கிறது. இந்திராதி தேவர்கள் கையினால் செய்வதை, தாம் காலால் செய்ய முடியும் என்று காட்டுவதைப்போல கால் விரலை வாயில்போட்டு கொண்டிருக்கிறார்.
இடது கட்டை விரல்தான் அவர்வாயில் போட்டிருப்பது. நடராஜனது தூக்கிய திருவடியும் இடதுதான்! சந்திரன் அமிர்தத்தை பெருக்குகிறவன். யோக சாதனை செய்வதன்மூலம் உடலின் இடது பாகத்தில் உள்ள சந்திரநாடியில் அமிர்தம் பெருகும். அந்த சந்திர நாடியில் வெளிப்படும் அமிர்தத்தைப் பருகுவதற்காக ஸ்ரீகிருஷ்ணர் இடது கால்கட்டை விரலை ருசிக்கிறார்.
ஆலமரம் பற்றி சில துளிகள்:
இம்மரத்தின் ஆயுள் 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்
இந்திய தேசிய சின்னங்களில் ஆலமரம் தேசிய சின்னமாக உள்ளது.
ஆலமரத்தின் விழுதில் பல்துலக்க பல் கெட்டிப்படும்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி
சிவன் ஆலமர் செல்வன் எனப் போற்றப்படுகிறான்.
ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி வாழ்க’ என வாழ்த்துவர்.
இன்றும் பல ஊர்களில் கிராமக் கூட்டங்கள் ஆலமரத்தடியில் நடைபெறுகின்றன.
திருஅன்பிலாந்துறை, திருப்பழுவூர், திருவாலம்பொழில், திருவாலங்காடு, திருமெய்யம், திருவல்லிபுத்தூர் போன்ற தலங்களில் ஆலமரம் தல விருட்சம்.
கருமேகங்களைச் சுண்டியிழுக்கும் மழைக் கவர்ச்சி மரங்களில் முதலிடம் ஆலமரத்திற்குத்தான். இந்தியாவில் அதிகம் மழை பெய்யும் வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் இதை அடர்ந்த காடாகக் காணலாம்.
.
கி.பி.10ஆம் நூற்றாண்டுக்குரிய சுரபாலர் விருக்ஷ ஆயுர்வேத நூலில் ஒரு நுட்பமான வைதீகக் குறிப்பு உள்ளது. ’சாத்திர முறைப்படி யார் இரண்டு ஆலமரங்களை நடுகின்றாரோ அவருக்குக் கைலாயத்தில் ஒரு இடம். கூடவே கந்தர்வக்கன்னியரின் கவனிப்பும் கிடைக்கும்.’ (பாடல் 13) ‘
‘வீட்டின் கிழக்கில் ஆலமரம் நட்டால் வேண்டிய வரம் கிட்டும்’ (பாடல் 24).
ஆலமரத்தைப் போல் ஆண்மையை வளர்க்கவும், சாகாமல் வாழ்வதற்கும் ஆலின் பல பாகங்களைச் சோதித்துள்ளனர்.
ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சம்பழம் அளவில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாட்களில் விந்து அணுக்கள் உற்பத்தி ஆகும்.
பாலியல் நோய்களுக்கும் – அதாவது மேகப்புண், மதுமேகம் – நிவாரணி, வாய்ப்புண், கரப்பான், சிரங்கு போன்ற நோய்களுக்குத் தாத்தாகாலத்து நாட்டு மருத்துவர்கள் ஆலம்பாலில் விழுதுக் கொழுந்தைச் சேர்த்துக் களிம்பு தருவார்கள்.
அகத்தியர் குணப்பாடத்தைப் புரட்டினால் இதன் மன்மத குணம் புரியும்.
ஆலம் விழுது நுனியில் அசட்டோ பாக்டர் என்ற நுண்ணுயிரி உள்ளது. அதையும் அரைத்துப் பஞ்சகவ்யக் கரைசலில் கலந்து சோதனை செய்யுங்கள். நிறைய மகசூல் பெறலாம்.
ஆலம்பழங்களை அரைத்துப் பஞ்சகவ்யாவில் சேர்த்தால் உயிர் ஊட்டம் பெருகும். ஆலந்தழைகள் கால்நடை உணவும் கூட. ஆடுகளுக்குத் தரலாம். இவ்வளவு பயன் உள்ள ஆலமரம் பல கோவில்களில் தல விருட்சமாகவும் உள்ளது.
”சொல்லுகின்ற மேகத்தைத்துட்ட அகக்கடுப்பைக்
கொல்லுகின்ற நீரழிவைக் கொல்லுங்காண்
நல்லாலின் பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
மேலும் இலைகளுமென விள்” – அகத்தியர் குணபாடம்
ஆலமரத்தின் எல்லா பாகங்களும் அருமருந்து. நீரழிவு நோய்க்கு ஆலம்பட்சைச்சாறு – ஆலம்பட்டைக் கஷாயம் மருந்து.
ஆலம்பழ ரசத்தில் கற்பூரத்தூள் கலந்து கண்நோய்க்கு (சுக்ரரோகம்) மருந்தாக சக்ரதத்தா பரிந்துரைத்துள்ளார்.
ஆலம் விழுதின் நுனி வாந்தியை நிறுத்தும்.
ஆலமரங்கள் மிகுந்துள்ள ஊர்களில் மழைப்பொழிவு இருக்கும். வேர் வழியே கூடுதல் நீரை நிலத்தடி ஊற்றுக்குள் செலுத்தும். இலைகளில் சேமித்த நீர் ஆவியாகி மழைக்கவர்ச்சி செய்யும். மழைக்காலம் முடிந்ததும் 5,6 அடி நீளமுள்ள போத்துகள் நடலாம் அல்லது ஆலம்பழங்களைப் பொறுக்கி வந்து அதன் சதையை நீக்கிவிட்டு உலத்திப் பின் நாற்றுப்பைகளில் போட்டு கன்று எழுப்பலாம்.
ஆலமரம் சுக்கிரனின் காரகம் பெற்றதென்றாலும் விழுதுகள் மற்றும் கயிறுகள் போன்றவை கேதுவின் காரகம் நிறைந்ததாகும். ஒருவருக்கு மாங்கல்ய பலம் நிலைக்க (திரு மாங்கல்ய சரடு நிலைக்க) சுக்கிரனின் அருளோடு கேதுவின் அருள் மிகவும் முக்கியமாகும். எனவேதான் ஆலமரத்தைக் கேதுவின் ஆதிபத்தியம் நிறைந்த மக நக்ஷத்திரகாரர்கள் வணங்க வேண்டிய விருக்ஷமாக அமைந்திருக்கிறது.
கார்ப்பு சத்து சுவாசப்பை (நுரையீரல்) ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருளை நீக்கி ரத்தத்திற்கு போஷாக்கை கொடுக்கும். இதன் விதை ஆண்களுக்கான கல்ப லேகியங்கள் அனைத்திலும் ஆலம் விதை இடம்பெறும்.
ஆலமரத்தில் நீண்டு தொங்கும் விழுதுகள் அதன் நுனிப்பகுதியில் ஒரு அடி அளவு வெட்டி எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து பொடி செய்து இரவில் நூறு மில்லி தண்ணீரில் அரை தேக்கரண்டி தூளை கலக்கி வைத்துவிட்டு காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் குடிக்கவேண்டும்.
இப்படி 21 நாள் அல்லது 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கர்ப்பப் பையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் சமப்பட்டு உடல் ஆரோக்கியத்தை உண்டு செய்யும். இது உடல் பெருக்கும் தன்மையும் உள்ளது. வயிற்றில் வரும் எட்டு விதமான புண்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் இதனுடைய பட்டை பயன்படுகிறது. ஆலம்பாலை வெள்ளை துணியில் நனைத்து காயவைத்து கொளுத்தி சாம்பலாக்கி அந்த சாம்பலை பலநாட்கள் ஆறாத ரணங்களுக்கு தேங்காய் எண்ணெயில் அல்லது வெண்ணெயில் குழைத்து போட்டால் ஆறிவிடும்.
மரத்தை கல்லால் குத்தி அதில் வரும் பாலை வாய்ப்புண், அச்சரம் போன்றவற்றிற்கு தடவினால் குணமாகும். ஆலம் இலை, கொழுந்து ஆகியவை லேகியங்களுக்கு பயன்படும்.