Monday, October 16, 2023
HomeArthamulla Aanmeegamஆன்மீகமும் ஜோதிடமும்

ஆன்மீகமும் ஜோதிடமும்

நவீனவிஞ்ஞானத்திற்கும் சாதாரண மனிதஅறிவிற்கும் அப்பாற்பட்ட, சூட்சும உலகம் மற்றும் கர்மாக்களின் அடிப்படையிலான விதியின் அம்சங்களை ஜோதிடத்தால் உணர முடியும் என்பது காலம்காலமாக நிருபிக்கப்பட்ட உண்மை. பலதரப்பட்ட ஜோதிடர்களிடம் ( 35 முகநூல் ஜோதிடர்கள் மற்றும் 200 இருக்கும் மேற்பட்ட சாதாரண ஜோதிடர்களிடம்) நடத்திய ஆராய்ச்சியின் முடிவுகளின் மூலம் தற்போதைய ஜோதிடர்களின் துல்லியதன்மை சராசரியாக 40% வீதம் மட்டுமே என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது தங்களை ஜோதிடர் என்று அடையாளப்படுத்தியவர்களிடம் அவர்களின் அதிகபட்சமாக துல்லியத்தை மதிப்பிடுவதற்கு பல ஆண்டுகளாக பல்வேறு புள்ளிவிவர ஆய்வுகள் நடத்தப்பட்டன. உதாரணமாக Astrology and science என்ற நிருவகம் நடத்திய ஒரு ஆய்வில் பல ஜாதகங்களும் அவற்றின் உரிமையாளர்களின் விவரங்களும் கலக்கப்பட்டன. ஜாதகங்களை அந்தந்த உரிமையாளர்களுடன் பொருத்த வேண்டிய பணி ஜோதிடர்களிடம் விடப்பட்டது. இவ்வளவு செய்த போதிலும், சராசரி வெற்றி விகிதம் தற்செயலாக எதிர்பார்க்கப்படும் அளவு 50% மாகவே இருந்தது. அதாவது, ஒரு நாணயத்தை சுண்டிவிடுவதை காட்டிலும் சிறந்ததாக இல்லை!

ஜோதிடர்களின் துல்லியத்தன்மை குறைவதற்கு நான் இரண்டு காரணங்களை எனது ஆராச்சியின் முடிவாக முன்வைக்கின்றேன்.

1. அவர்கள் ஜோதிடம் கற்க எடுத்துக்கொண்ட முறை துல்லியம் குறைந்தாக இருப்பது.,

2. தங்கள் கற்க எடுத்துக்கொண்ட ஜோதிட முறையில் போதிய புலமை பெறாது இருப்பது.

நீங்கள் ஜோதிடம் கற்க எடுத்துக்கொண்ட முறை என்பதுதான் மிகவும் முக்கியமானது. ஒரு ஒரு பாரிய கட்டடத்தில் அடித்தளம் போன்றது. இது சக்திவாந்ததாக இருந்தால்தான் நாம் நமது ஜோதிடத்தின் திறனை வளர்க்க முடியும். இலகுவான முறை என்று தரமற்ற ஜோதிட முறைகளை எடுத்து ஜோதிடம் கற்றால் உங்கள் ஜோதிடம் ஒரு அளவிற்கு மேலே தடைபட்டு நின்றுவிடும். நான் பாரம்பரிய ஜோதிட முறையினை உங்களுக்கு பரிந்துரைக்கின்றேன். இந்த பாரம்பரிய ஜோதிட முறையில் பலன் காண்பதற்கும், கிரக அளவீடுகள் செய்வதற்கும் சில முறைகள் உள்ளது. அதில் உங்களுக்கு விரும்பிய முறையினூடு (மட்டும்) நீங்கள் பயணிக்கலாம். பாரம்பரிய ஜோதிட முறையானது கற்பதற்கும், புரிவதற்கும் கடினமானது. அதனால்தான் அனைவராலும் இதனை கற்க முடிவதில்லை. ஜோதிடத்தில் பாரம்பரிய ஜோதிடம் (வேத ஜோதிடம்\பராசர ஜோதிடம்), நாடி ஜோதிட முறைகள், ஜெய்மினி ஜோதிடம், கைரேகை ஜோதிடம், பஞ்சபட்சி சாஸ்திரம், பிரசன்ன ஜோதிட முறைகள், ஆருட முறைகள், சீனஜோதிடம் என சில புராதன முறைகள் இருந்தாலும் எண் கணித ஜோதிடம், மேலைத்தேய ஜோதிடம், k.p ஜோதிடம், K.B ஜோதிடம், பல பத்ததி முறைகள், அந்த ஜோதிடம் இந்த ஜோதிடம் என தற்போது ஆயிரம் முறைகள் தற்போதைய மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை பாரம்பரியமாக வராத; தற்போதைய மாந்தர்களால் வருவிக்கப்பட்ட ஜோதிடமுறைகள் துல்லியம் அற்றவை. கூறப்போனால் அனைத்து ஜோதிட வகைகள் & முறைகளும் பாரம்பரிய (வேறு பெயர்கள்:வேத ஜோதிடம்\பராசர ஜோதிடம்) ஜோதிடத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்டவையாகும். தற்போதைய ஒருசில ஜோதிட முறைகளில் சில உண்மையான அதேசமயம் காலத்திற்கு ஏற்ப பொருட்களை நிர்ணயம் செய்யும் தன்மை காணப்படுகிறது. அதனை நான் வரவேற்கின்றேன். எது எப்படியாக இருந்தாலும் ஒரு ஜோதிட முறையினை பின்பற்றுபவர் அந்த ஜோதிட முறையினை முறையாக பயின்று அதில் உள்ள விதிகளை வைத்து தனது கணிப்பை செய்ய வேண்டும். அதைவிடுத்து ஒவ்வொரு ஜோதிட முறைகளிலுமிருந்து சில விதிகளை எடுத்து பலன் பார்க்கபோனால் அது தெளிவற்ற சந்தியில்தான் கொண்டுபோய் நிறுத்தும். பாரம்பரியமாகவே சில ஜோதிட முறைகள், சில ஜோதிட முறைகளின் மீது பிரயோகிக்கக்கூடியவை. அதற்கு உதாரணமாக; பராசர ஜோதிடம் முறையின் மீது மேலதிகமாக ஜாமக்கோள் ஆருட முறையினை பிரயோக்கிக்கலாம். ஆனால் தற்போதையவர்கள் சம்பந்தமே இல்லதவற்றை வைத்து இணைத்து தாமும் குழப்பி மக்களையும் குழப்பி விடுகின்றனர். எதாவது ஒரு முறையினை அதில் கலப்படம் இல்லாமல் சரியாகவும் ஆழமாகவும் பயன்படுத்துங்கள்.

சாதாரணமாக ஒரு சிறு வேலையினை செய்வதற்கே நமக்கு அதனோடு சம்பந்தப்பட்ட அறிவும் அனுபவமும் தேவைப்படும்போது; கர்மாக்களின் அடிப்படையில் அமையும் நமது வாழ்க்கையின் நிகழ்வுகளை அறிவதற்கும், பரிகாரங்களின் சூட்ச்சுமம் தெரிவதற்கும் எவ்வளவு ஜோதிட உள்ளமை வேண்டும் என்று நினைத்துப்பாருங்கள். ஒன்று அல்லது இரண்டு மாத வகுப்பின் மூலமாக ஜோதிடம் கற்றல், குறைவான எளிய விதிகளின் மூலம் ஜோதிடம் கற்றல், இலகுவாக ஜோதிடம் கற்றல் என்பது அனைத்தும் உங்களை ஏமாற்றும் செயல் என்பதனை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜோதிடம் வேதத்தின் கண் எனப்படுகிறது. வேதம் எமது இந்துசமய ஆன்மீக அடித்தளமானது. ஜோதிடம் இங்கு முதன்முதலாக ஜோதிடத்தினை உருவாக்கியவர்கள் அனைவரும் ரிஷிகளும் முனிவர்களும் சித்தர்களுமே ஆகும். அவர்களை தொடர்ந்து அவர்கள் வழியினை பின்பற்றுபவர்களால் வருவிக்கப்பட்டுள்ளது. ஜோதிடம் உங்கள் வசப்பட முதலில் உங்கள் ஜாதகத்தில் ஜோதிடம் கற்று புலமைபெறும் அமைப்பு இருக்க வேண்டும். ஒரு ஜோதிடர் பகுத்தாய்ந்து பொருள் கொள்ளும் திறனையும், சூட்சும துல்லியத்தையும் ஆன்மீக பயிற்சி செய்வதால் மட்டுமே அதிகரிக்க முடியும்.

ஜோதிடம் என்பது மிக விரிவான பரந்த ஞானத்தை உள்ளடக்கியது. இது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலையை அடிப்படையாகக் கொண்ட மிக சிக்கலான கணக்குகள் மற்றும், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைக்கும் மனித வாழ்வை உள்ளடக்கிய பூமியிலுள்ள நிகழ்வுகளுக்கும் இடையேயான தொடர்புகள் மற்றும், விஞ்ஞான விளக்கத்திற்கு அப்பாற்பட்டு நிற்கும் சூட்ச்சுமங்கள் தொடர்பானது. சித்தமருத்துவரை ஒருவர் ஆலோசிக்கிறார் என்றால், அவர் (சித்த மருத்துவர்) இது பித்தம், கபம், வாதம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக இருப்பதாக கூறுவார், ஒரு ஜோதிடரை ஒருவர் ஆலோசிக்கிறார் என்றால், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் ஒரு குறிப்பிட்ட நிலை காரணமாக இருப்பதாக அவர் கூறுவார், ஒரு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றால், அது உடலின் சில பகுதிகளை பாதிக்கும் நோயால் தான் ஏற்படுகிறது என்று கூறுவார், உயர் ஆன்மீக நிலையில் இருப்பவரிடம் ஆலோசனை பெற்றால், அது விதியின் காரணமாக ஏற்படுவதாக கூறுவார். எனவே நோயை கண்டறியும் வகைகளில் எதை நம்புவது?ஆன்மீகத்தின்படி, இவை அனைத்துமே உண்மை.

ஏனென்றால், இந்த பதில்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை அல்ல. மாறாக, இவை ஒரு கஷ்டத்தின் பின்னால் உள்ள காரணத்தை வெவ்வேறு முறைகளின் அடிப்படையில், வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, விதியின் படி நடக்கப்போவதை, நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைக்கு ஏற்றவாறும் விளக்கலாம். கூறப்போனால் அனைத்து காரணகாரியங்களையும் அனைத்து விளக்கங்களையும் நாம் ஜோதிடத்தில் வைத்தே சொல்லிவிட முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 8 =

Most Popular