அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது.
அபிஷேகத் திரவியங்களும் உன்னதப் பலன்களும்:
அன்னாபிஷேகம் — விளைநிலங்கள், நன்செய் தரும், நாடாளும் வாய்ப்பு அளிக்கும், அரசுரிமை, மோட்ச கதியை அடையலாம்!
அருகம்புல் ஜலம் — நஷ்டமான பொருட்கள் திரும்பக் கிடைக்கும்
இளநீர் — நல் சந்ததியளிக்கும், ராஜயோகம் கொடுக்கும், இன்பங்கள் நல்கும்
இளவெந்நீர் — முக்தி
உத்திராட்ச ஜலம் — ஐஸ்வர்யம் பெருகும், ஞானம் பெறலாம்!
எலுமிச்சம் பழச்சாறு — எம பயம் போக்கும், யமபய நாசம், நட்புடை சுற்றம்
கந்த தைலம் — இன்பம்
கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) ரஸம் — ஸத்ருக்கள் இல்லாமல் போவார்கள்.
கருப்பஞ்சாறு — ஆரோக்கியமளிக்கும், தனம் விருத்தி யாகும்.
கஸ்தூரி ஜலம் — சகல யோகங்களும் பெற்று வாழலாம்.
குங்குமப்பூ — சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
கும்பஜலம் — பிறவிப்பயன் அளிக்கும்
கொளஞ்சி நாரத்தைப் பழச்சாறு — சோகம் போக்கும்
கோரோசணை — சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
சங்காபிஷேகம் — நலமெலாமளிக்கும்
சந்தனக் குழம்பு — தொலையா நிதியம் (லலக்ஷ்மி கடாக்ஷம்) சேர்க்கும், அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும், சுகம், பெருமை சேர்க்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும்
சர்க்கரை — பகைகளையும், பகைவரையும் அழிக்கும், சந்தோஷம் பிறக்கும்!
சாத்துக்கொடி பழச்சாறு — துயர் துடைக்கும்
சுத்த ஜலம் — நஷ்டமானவை திரும்பக் கிடைக்கும், விருப்பங்கள் நிறைவேறும்
தங்கம் கலந்தநீர் — சகல சௌபாக்கியம் கிட்டும்
தமரத்தம் பழச்சாறு — மகிழ்ச்சி தரும்
தயிர் — குழந்தைச் செல்வம் கிட்டும்
தர்ப்பைப்புல் கலந்தநீர் — ஞானம் தரும்
திராட்சை ரஸம் — எடுத்த காரியம் வெற்றி தரும், திடசரீரம் அளிக்கும் .
திருநீறு — சகல நன்மையும் தரும்
திருமஞ்சனத்திரவியம் — பிணிநீக்கம்
தேங்காய்த்துருவல் — அரசுரிமை
தேன் — சுகமளிக்கும், சங்கீதவிருத்தி, சங்கீத குரல்வளம்
நல்லெண்ணை : — நலம்தரும்
நவரத்தின ஜலம் — தனம் தான்யம் பெருகும். வீடு மனை யோகம் கிட்டும்.
நன்னீர் — தூய்ப்பிக்கும்
நாரத்தம் பழச்சாறு — மந்திர சித்தி ஆகும், ஒழுங்கு ஏற்படுத்தித் தரும், சந்ததி வாய்க்கும்
நாவல்பழ ரஸம் — வைராக்கியம் கூடும். மனோபலம் அதிகரிக்கும்.
நெய் — முக்தியளிக்கும், மோக்ஷம் அளிக்கும்
நெல்லிப்பருப்புப்பொடி — பிணிநீக்கம்
பச்சரிசி மா — மல நாசம், கடன் தீரும்
பச்சைக் கற்பூரம் — சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
பசுந்தயிர் — மகப்பேறு வாய்க்கும், தேஜஸ் கூடும்.
பசும்பால் — நீண்ட ஆயுள் தரும், சகல சௌபாக்கியங்களும் ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.
பஞ்சகவ்யம் — தீதளிக்கும், ஆன்மசுத்தி, சுத்தம், சகல பாவத்தைப் போக்கும்
பஞ்சாமிருதம் — பலம், வெற்றி தரும்
பல்லவம் — உலகை வயப்படுத்தும்
பலாப்பழம் — மங்கலம் தரும், யோகசித்தி
பழபஞ்சாமிர்தம் — முக்தி, செழிப்பினைத் தரும், செல்வங்கள் பெருகும்
பன்னீர் — சருமம் காக்கும், குளிர்ச்சி தரும்
பஸ்மத்தினால் — மஹா பாபங்கள் விலகும். புண்ணியங்கள் பெருகும்.
பால் — ஆயுள் விருத்தி உண்டாகும்
புனுகு — சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்.
புஷ்ப ஜலம் — வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும்.
மஞ்சட்பொடி — அரச வசியம், நல் நட்பு வாய்ப்பிக்கும்.
மஞ்சள் ஜலம் — மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும்.
மணம் உள்ள தைலம் — சுகம் தரும்.
மாதுளம் பழச்சாறு — பகைமை அகற்றும், கோபத்தை நீக்கும்.
மாப்பொடி — கடன் நீங்கும்.
மாம்பழ ரஸம் — தீராத வியாதிகள் தீரும், செல்வம், வெற்றி தரும், மகனுக்குச் சீர் சேர்க்கும்.
ரசபஞ்சாமிர்தம் — முக்தி கிடைக்கப் பெறும்.
ரத்னம் கலந்தநீர் — சகல சௌபாக்கியம் கிட்டும்
வாழைப்பழம் — பயிர் செழிக்கும்
விபூதி — சகல ஐஸ்வர்யம் தரும்
வில்வங் கலந்தநீர் — மகப்பேறு தரும், போக யோக பாக்கியங்கள் கிடைக்கப் பெறலாம்.
ஜவ்வாது — சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
ஸ்நபன கும்பாபிஷேகம் — சித்த சுத்தியடைந்து சிவதரிசனம் கிட்டும்
ஸ்வர்ண (தங்கம்) ஜலம் — முகம் தேஜஸ் பெறும். சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம்!
பஞ்சகவ்யம்: கோமயம் (பசுஞ்சாணம்), கோஜலம், நெய், தயிர், பால்
பஞ்சாமிர்தம் இரு வகை:
ரஸ பஞ்சாமிர்தம் – ஏலக்காய் முதலிய வாசனைப் பொருட்கள் சேர்த்த நீருடன் பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்துச் செய்யப்படுவது.
பல (பழ) பஞ்சாமிருதம் – மேற்குறிப்பிட்ட பொருட்களுடன், மா, பலா, வாழை உள்பட ஏனைய பழங்களையும் சேர்த்து செய்யப்படுவது ஆகும்.
பூஜைக்குச் சிறந்த பழங்கள்:
வாழை, மாதுளை, மா, புளி, பலா , நெல்லி, நாகப்பழம் , கொய்யா, எலுமிச்சை, இலந்தை
