சந்தியாவந்தனம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்!

123

சந்தியாவந்தனம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்!

சந்தியாவந்தனம் என்பது தினமும் முக்காலமும் செய்ய வேண்டிய நித்திய கர்ம அனுஷ்டானம் எனப்படும்.அதாவது சூரியனை வணங்கும் பிரத்யேக முறைக்கு சந்தியாவந்தனம் என்று பெயர்.

சந்தியாவந்தனம் என்பது வெவ்வேறு வேதங்களை பின்பற்றுபவர்கள் வெவ்வேறு முறையில் செய்வார்கள். உதாரணமாக ரிக் வேதிகள் சந்தியாவந்தனத்திற்கும் யஜுர் வேதிகள் சந்தியாவந்தனத்திற்கும் வித்தியாசம் இருக்கும். அதற்கான மந்திரங்கள் மாறுபடும்.மாநிலத்துக்கு மாநிலமும் சில வேறுபாடுகள் இருக்கலாம். இதற்கான மந்திரங்கள் காலை, மதியம், மற்றும் மாலை வேளைகளில் வேறுபடும்

சந்தியாவந்தனத்தின் நன்மைகள்:

இதனால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. சந்தியாவந்தனம் மூன்று முறை செய்யப்படுகிறது, காலை சூரியன் உதிக்கும் நேரம் மதியம் சூரியன் உச்சி யில் நிற்கும் நேரம் மற்றும் மாலை பொழுது இது முறையே முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் சந்தி என்று கூறப்படுகிறது.

சந்தியா காலம் என்பது மிகவும் சக்தி மிக்க காலமாக கருதப்படுவதால் இந்த நேரத்தில் செய்யும் பிராத்தனை அதிக பலன் தருவதாகும். இது இரண்டு பாகங்களாக இருக்கிறது முதல் ஜல பாகம் அதாவது நீரினால் செய்யக்கூடிய பிராத்தனை இரண்டாவது நில பாகம் அதாவது நிலத்தின் மீது செய்யக்கூடிய பிராத்தனை. ஜல பாகத்தில் அர்க்யம் என்கிற வழிமுறையை கடைபிடிக்கிறார்கள் அதாவது நீரை இரு கைகளால் அள்ளி வானத்தில் இறைப்பது, நில பாகத்தில் தண்ணீரை வலது உள்ளங்கையில் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி குடிக்க வேண்டும்.

பிறகு தண்ணீரை கைகளில் வைத்துக்கொண்டு விரல்களினால் இரண்டு கன்னங்கள் கண்கள், மூக்கு துவாரங்கள், தோள்கள், நெற்றி, தொப்புள் பகுதி ஆகியவற்றை மந்திரங்கள் சொல்லி தேய்க்க வேண்டும் இப்படி செய்வதால் குறிப்பாக விரல்களினால் செய்வதால் நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி பெறுகிறது மனம் தெளிவாகிறது சந்தியா வந்தனத்தின்போது காயத்ரி ஜெபத்தை சொல்ல வேண்டும்

காயத்ரி ஜெபத்தை குரு முகமாக உபதேசிக்கப்பட்ட யாவரும் சந்தியாவந்தனம் செய்யலாம். இந்த முறையை பின்பற்றினால் மனம் புத்துணர்ச்சி பெற்று முகம் பொலிவு பெரும். நமது நரம்பு மண்டலங்களுக்கு இந்த பயிற்சி மிக அற்புதமாக பயனளிக்கிறது. சந்தியாவந்தனத்தை நீர் நிலைகளில் செய்வது மிக நன்மை தரும் இல்லை என்றால் பாத்திரத்தில் தண்ணீரை வைத்து கொண்டும் செய்யலாம் மற்ற இரண்டு வேளைகளில் செய்ய முடியாதவர்கள் காலை நேரத்தில் விடாமல் செய்ய வேண்டும். இதை தொடர்ந்த செய்பவர்கள் வாழ்வு அற்புதமான மாற்றத்தை கண்கூடாக காணலாம் என்பதில் ஐயமில்லை.