பைரவர் அர்ச்சனை!
உபாசனாகுலபதி ஸ்ரீ துர்க்கைச்சித்தர் அருளிய திருவிசநல்லூர் ஸ்ரீ சதுர்கால ஸ்வர்ணாகர்ஷண பைரவ அர்ச்சனை.
ஓம் ஸ்ரீம் தன வயிரவா போற்றி!
ஓம் ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி!
ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி!
ஓம் ஸ்ரீம் தனநாதா போற்றி!
ஓம் ஸ்ரீம் தனத்தேவா போற்றி!
ஓம் ஸ்ரீம் குலதேவா போற்றி!
ஓம் ஸ்ரீம் குருநாதா போற்றி!
ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி!
ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி!
ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி!
ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி!
ஓம் ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி!
ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி!
ஓம் ஸ்ரீம் வறுமையின் மருந்தே போற்றி!
ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி!
ஓம் ஸ்ரீம் திருவுடைச்செல்வா போற்றி!
ஓம் ஸ்ரீம் தினம்தினம் காப்பாய் போற்றி!
ஓம் ஸ்ரீம்திருமணத்தேவா போற்றி!
ஓம் ஸ்ரீம் திருவருள் தருவாய் போற்றி!
ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி!
ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி!
ஓம் ஸ்ரீம் சித்தருக்கு சித்தா போற்றி!
ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி!
ஓம் ஸ்ரீம் சித்தாந்த வடிவே போற்றி!
ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி!
ஓம் ஸ்ரீம் முழு நிலவானாய் போற்றி!
ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி!
ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி!
ஓம் ஸ்ரீம் முழுத்தனம் தருவாய் போற்றி!
ஓம் ஸ்ரீம் முகிழ்நகை வயிரவா போற்றி!
ஓம் ஸ்ரீம் இரும்பை பொன்னாக்கினாய் போற்றி!
ஓம் ஸ்ரீம் இருந்தருள் செய்ய வந்தாய் போற்றி!
ஓம் ஸ்ரீம் வேண்டத்தக்கவை அறிவாய் போற்றி!
ஓம் ஸ்ரீம் வேண்டும் நல்வரம் தருவாய் போற்றி!
ஓம் ஸ்ரீம் கண்கண்ட தெய்வமே காட்சியே போற்றி!
ஓம் ஸ்ரீம் திருவிசநல்லூர் சதுர்கால பைரவா போற்றி! போற்றி!
திருவிச நல்லூர் வயிரவன் இருதாள் பணிவோம்
இன்பமும் வாழ்வும் என்றுமே அடைவோம்
இனி எல்லாம் ஜெயமே !
ஸ்ரீ சதுர்கால பைரவர் ஆலயம், திருவிசநல்லூர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில், பூம்புகார்-கல்லணை சாலையில் கும்பகோணத்திலிருந்து கிழக்கு திசையில் 7வது கி.மீ.-ல் , தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான, திருவிசநல்லூர் அருள்மிகு சௌந்தரநாயகி அம்பாள் சமேத அருள்மிகு சிவயோகி நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ரிஷப ராசிக்குரிய பரிகாரத் தலமாகும்.
இத்தலத்தின் ஈசான்ய மூலையில் நான்கு யுகங்களில் பல்வேறு சித்தர் பெருமான்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நான்கு பைரவ பெருமான்கள், சதுர்கால பைரவர் என வழங்கப்பெற்று காட்சியளிக்கின்றனர். இச்சிறப்புமிகு சதுர்கால பைரவரை முழு இறை உணர்வுடனும், முழு நம்பிக்கையுடனும் பணிந்து வணங்குவோருக்கு, பொருளாதார சிரமங்கள் விலகி ஓடுதலை அவரவர் உணரலாம். மேலும், இத்தலமே, பாவநிவர்த்தி தலமாகும். உங்கள் பாவங்கள் நிவர்த்தி பெறவும், பைரவரின் கருணை பொங்கும் அருள் பெறவும் வாருங்கள் திருவிசநல்லூருக்கு!
பைரவர் விரும்பும் நைவேத்தியங்கள்
சர்க்கரைப் பொங்கல்
தயிர் சாதம்
தேன்
செவ்வாழை
வெல்லப்பாயாசம்
அவல் பாயாசம்
நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை
சம்பா அரிசி சாதம்
பால் மற்றும் பலவகை பழங்கள்
நான்கு பைரவர்தம் திருநாமங்கள் !
1.ஞான பைரவர்
2.சொர்ணாகர்ஷண பைரவர்
3.உன்மத்த பைரவர்
4.யோக பைரவர்.
பைரவர் விரும்பும் பூக்கள்/மாலை
உகந்த பூக்கள்:
செவ்வரளி
மஞ்சள் செவந்தி
இதர வாசனைப்பூக்கள்
உகந்த மாலை:
தாமரைப்பூ மாலை
வில்வமாலை
தும்பைப்பூ மாலை
சந்தன மாலை
வழிபாட்டு காலங்கள்:
ஒவ்வொரு வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி அன்றும் மாலை 4.30 மணிக்கு சிறப்பு ஹோமமும், எல்லா அஷ்டமிகளிலும் மாலை 6.00 மணிக்கு சிறப்பு மஹா அபிஷேகமும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
