Saturday, October 28, 2023
HomeArthamulla Aanmeegamஆடி 18ல் கடனுக்கு கார் வாங்கலாமா?

ஆடி 18ல் கடனுக்கு கார் வாங்கலாமா?

ஆடி 18ல் கடனுக்கு கார் வாங்கலாமா?

ஆடிப்பெருக்கு நாளான இன்று நாம் எந்தப் பொருள் வாங்கினாலும் அது மென்மேலும் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். அப்படியிருக்கும் போது நீங்கள் கடன் மட்டும் வாங்கிவிட்டால் அது உங்களுக்கு மென்மேலும் சுமை தானே தவிர, அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நகையோ, வீடோ, காரோ வாங்கலாம். அப்படி வாங்கினால் அது உங்களுக்கு மென்மேலும் கூடிக் கொண்டே இருக்கும். திருமணமான தம்பிகளுக்கு தான் ஆடி மாதம் சரிப்பட்டு வராதே தவிர, மற்ற அனைவருக்கும் இந்த ஆடி மாதம் அமோகமான நாளாக இருக்கும்.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு முக்கியமான நாள். ஒவ்வொரு வீடுகளிலும் பெண்கள் கூழ் காய்ச்சி அம்மனுக்கு படையிலிட்டு அதனை பிரசாதமாக வழங்குவார்கள். கூழுக்கு மிஞ்சிய விருந்தும் இல்லை, வேப்பிலைக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்று சொல்வார்கள். அந்தளவிற்கு ஆடி மாதம் விஷேசமானது.

அதிலேயும், இந்த ஆடி மாதம் 18ஆம் தேதி வரக்கூடிய ஆடிப்பெருக்கு திருவிழாவாக கொண்டாடப்படும். விவசாயிகளுக்கு ஆடிப்பெருக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கேற்ப விதை விதைப்பார்கள்.

ஆடிப்பெருக்கை, 18ஆம் பெருக்கு என்றும் ஆடி 18 என்றும் குறிப்பிடுகின்றனர். உண்மையில், 18 என்ற எண் வெற்றியைக் குறிக்கிறது. மகாபாரத்தில் 18 பர்வங்கள், பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள், சபரி ஐயப்பனுக்கு 18 படி, கருப்பசாமிக்கு 18 படி ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்ததாக கூறப்படுகிறது.

இவ்வளவு ஏன், நீர் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளில் கூறு, 18 படிகளை அமைத்து நமது முன்னோர்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் காவிரி தேவிக்கு ஆடி பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக, குடும்ப பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள் என்று அனைவரும் காவிரித் சந்தனம், வெற்றிலை, பாக்கு, பழம், பத்தி, சாம்பிராணி, கற்பூரம், பூக்கள், நாணயங்கள், தேங்காய், குங்குமம், பச்சரிசி, வெல்லம், பன்னீர், வாழை இலை என்று பலவற்றைக் கொண்டு சென்று வழிபாடு செய்வார்கள். இப்படி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஆடி 18ஆம் பெருக்கை கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஆடிப்பெருக்கு நாளில் நாம் வாங்கும் பொருள் அல்லது சேர்க்கக்கூடிய பொருட்கள் நமக்கு மென்மேலும் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். ஆடி 18ஆம் பெருக்கான இன்று நகை வாங்க மிகவும் உகந்த நாள். ஆடி பெருக்கில் நகை வாங்கி வீட்டில் வைத்தால் நகை பெருகிக் கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.

நகை வாங்க முடியாதவர்கள் மகாலட்சுமி வாசம் செய்யும் கல் உப்பு, மங்களகரமான பொருட்களில் ஒன்றான மஞ்சளையும் வாங்கி வீட்டு பூஜையறையில் வைத்து மனதார வழிபட வேண்டும். அப்படி செய்தால் வீட்டிற்கு தேவையான அனைத்து ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் வாங்க கூடாது:

முக்கியமாக ஆடிபெருக்கில் கடன் மட்டும் வாங்கவே கூடாது. கடன் என்று வாங்கிவிட்டால் அவ்வளவு தான். உங்களுக்கு கடன் கூடிக் கொண்டே இருக்கும். தான, தர்மம் செய்து புண்ணியத்தை தேடிக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் உங்களது வாழ்வில் புண்ணியம் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடிபெருக்கில் என்ன செய்யலாம் (வாங்கலாம்):

  1. புதிதாக தொழில் தொடங்கலாம்.
  2. புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை போடலாம்.
  3. தங்க நகைகள் வாங்கலாம்.
  4. புதிதாக வீடு வாங்கலாம்.
  5. நிலம் வாங்கலாம்.
  6. கார் வாங்கலாம்
  7. பைக் வாங்கலாம்.

இந்த மாதிரியானவற்றை ஆடிப்பெருக்கன்று வாங்கினால், நம் வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும். ஆடி 18ல் ஆடி கார் வாங்கினால், அடுத்தடுத்து கார் வாங்கிக் கொண்டே இருப்பீர்கள். ஆடி கார் வாங்கிய பிறகு பிஎம்டபிள்யூ, வோல்ஸ்க்வேகன், ஹூண்டாய், ரேஞ்ச் ரோவர், ரோல்ஸ் ராய்ஸ் என்று கார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 8 =

Most Popular