Sunday, October 15, 2023
HomeArthamulla Aanmeegamகாயத்ரி மந்திரம் சொன்னால் கோடீஸ்வரனாக முடியுமா?

காயத்ரி மந்திரம் சொன்னால் கோடீஸ்வரனாக முடியுமா?

காயத்ரி மந்திரம்:

காயத்ரி மந்திரம் உச்சரித்தால் எப்படி கோடீஸ்வரன் ஆக முடியும்? என்ற கேள்விக்கு உண்டான கதை என்ன என்று இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.

ஒரு முறை அக்பர் மாளிகையில் தினமும் யாசகம் கேட்டு வந்த ஒரு பெரியவரை மகான் கோலத்தில் மன்னர் அக்பர் கண்டு வியந்தார். என்னடா இது? சில நாட்களுக்கு முன்பு வரை நம்மிடம் பிச்சை கேட்டு வாழ்ந்து வந்த இந்த முதியவரை இன்று மகான் என்று மக்கள் கொண்டாடுகிறார்களே எப்படி இது நிகழ்ந்தது என்று சிந்தித்து கொண்டு இருந்தார். கூட்டம் கலைந்து அந்த முதியவரிடமே சென்று கேட்டும் விட்டார் அக்பர்.

அதற்கு அந்த பெரியவர் அருகில் நின்று கொண்டிருந்த பீர்பாலை சுட்டி காட்டி மன்னர் பெருமானே பீர்பால் தான் என்னை காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் அதிக பணம் தருகிறேன் என்று கூறினார். நானும் பணம் கிடைக்கிறதே என்று அவர் கோரியவாறு உச்சரித்து வந்தேன். ஆனால் என்னை அறியாமல் என் உடலில் புது வித மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன். பின்னர் பக்தி சிரத்தையுடன் கூறி வந்தேன்.

அதனால் உள்ளம் சக்தி பெறுவதை கண்டேன். இந்த சக்தியால் தான் இன்று மக்களுக்கு என்னால் அருள்வாக்கு கூற முடிகிறது. தீரா பிணி தீர ஆசி வழங்குகிறேன் என்றார். சாதாரண மனிதனையும் தெய்வீக சக்தி பெற்ற மனிதராக மாற்றிய மந்திரம் தான் காயத்ரி மந்திரம். உடனே அனைவரும் கோடீஸ்வரனாக மாறி விட முடியுமா என்று கேட்கலாம். நம்பிக்கையுடன், பக்தி சிரத்தையுடன் உச்சரித்து வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

காலையில் கண் விழித்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் இறக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!

ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.

கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்

நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + thirteen =

Most Popular