அதை தாண்டி பொன்னமபலம் என்ற அந்த பொன்னால் ஆனா கூரையில் கொஞ்சம் இடது பக்கமாக கள்ள சிரிப்போடு காலை தூக்கி ஆடிக்காட்டும் #அமலபவாணனை மட்டும் பாத்திரவே பாத்திராதிங்க !!
அப்படி மீறி போய் அவனை பாத்து விட்டிங்க என்றால் அவ்வளவு தான் உங்கள் வாழ்க்கை !!
அடிக்கடி வரவைப்பன், உங்களை உங்கள் வேலையை நீங்கள் நினைத்தது போல பார்க்கவிடமாட்டான் !!
சும்மா எப்பவும் அவனையே நினைக்கவைப்பான், கொஞ்சம் கொஞ்சமாக உங்களை கொன்று அவனே உங்களை ஆக்கிரமித்து விடுவான் !!
உங்களை தொலைத்து விடுவிங்க !!
அதிலே ? இதுல ??என்று இல்லாது எதிலேயும் !!
உங்க போதை ( பணம் , பாசம் , வேஷம் , சொத்து ) எதுவாக இருப்பினும் அதிலிருந்து விடுவித்து அவனே போதையாவன் !!
எல்லா போதையும் உங்களை சிக்க / மயங்க வைக்க இவன் போதையோ தெளியவைக்கும் !!
அந்த தெளிவு நீங்கள் வாழும் வாழ்வு எவ்வளவு நடகமயமானது ?? எப்படியெல்லாம் உங்களை நீங்களே விரும்பி ஏமாற்றி கொள்கிறீர்கள் !!
போன்ற பொய்யையெல்லாம் போட்டு நீங்களே உணரும்படி போட்டு உடைத்து விடுவான் !!
அப்புறம் எப்படி நீங்கள் எல்லோரையும் போல வாழ முடியும் ??
நீங்கள் நீங்களாக வாழ தொடங்கினால் யார் உங்களை ஒத்துகொள்வார்கள் ??
அது இருந்தால் இன்பம் ?
இது இருந்தால் துன்பம் ??
அப்படி இருந்தால் நிம்மதி ??
இப்படி வாழ்ந்தாலே மகிழ்ச்சி ??
அதுஎல்லாம் சரி ??
இதுவெல்லாம் தவறு ?? போன்ற
அத்தனையும் தகர்த்து எரிந்து !!??
நான் இருக்கிறேன் !!
எங்கும் இருக்கிறேன் !!
எதுவுமாகவும் இருக்கிறேன் !!
உன்னுள்ளே கூட கலந்தே இருக்கிறேன் !!
இருப்பது எல்லாமே என்னாலேயே இருக்கிறது !! இயங்குகிறது !!
இல்லை என்று இருப்பது / நினைப்பது கூட என்னுளேயே தான் இருக்கு !!
என்று
உறுத்தி, உணர்த்தி காட்டுவான் !!
அப்புறம் நீங்கள் யாருக்கும் காக்க பிடிக்கவோ ?? கூஜா தூக்கவோ ?? மாட்டிங்க !!
அப்புறம்
உங்களை யார் எற்றுகொள்வார்கள் !!
உங்கள் அவனே எற்றுகொண்டு இருக்கிறான் என்று தெளிவு தரும் துணிவு !!
எதையும் அஞ்சாமல் எதிர்கொள்ள வைக்கும் !!
எதற்கெடுத்தாலும் அஞ்சும் உலகம் உங்களை ஓர் மாதிரியாககூட பார்க்கும் !!
இந்த பொய் வாழ்க்கை தொலைந்து விடும் !! ஜாக்கிரதை !!??
நாம் வாழ்வது என்பது இந்த பூமியை கடந்தும் என்று கூட்டிக்கொண்டு போவன் !!
யாரும் ஒத்துகொள்ள மாட்டார்கள் !!??
தேவையா இது ????????
தில்லைக்கு போகாதிங்க !!
போய் பாத்து இவனும் பெற்று அனுபவிக்கும் அனுபவத்தை வைத்தே இந்த பதிவு !!
உங்களுக்கு எப்படியோ ??
எதையுமே செய்யாதிங்க என்றாலே செய்து பார்ப்போம் என்ற துணிவு பிறக்கும், அந்த துணிவை செயலாக்கினால் …………
நீங்களே அனுபவித்து தெரிந்துகொள்ளுங்கள் !!
நடராஜா நடராஜா
திருச்சிற்றம்பலம்
நற்றுணையாவது நமச்சிவாயவே
