நந்தி தேவரின் வகைகள் பற்றி தெரியுமா?
1. இந்திரநந்தி (போகநந்தி):
கோவிலுக்கு வெளியே இறைவனை (சிவபெருமானை) நோக்கி இருப்பது 5 ம் பிரகாரத்தில் ஆகும்.
2. பிரம்மநந்தி (வேத நந்தி):
இது மிக பெரிய நந்தி இதற்கு வேத நந்தி ( அ) வேதவெள்விடை என்று பெயர் பெரிய மண்டபத்தில் கம்பீரமாக வீற்றிருப்பது ஆகும் ( உ-ம்) காஞ்சி ராமேஸ்வரம் திருவிடைமருதூர் தஞ்சை திருவாவடுதுறை கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய தலங்களில் பெரிய நந்தியாக உள்ளது.
3. விஷ்ணு நந்தி:
மால்விடை சிவபெருமான் திரிபுரம் எரிக்க முற்பட்டபோது விஷ்ணு இடப வடிவமெடுத்து அவரை (சிவபெருமானை) ஏந்தியது ஆகும் சிவன் சன்னதி அருகில் உள்ளது.
4. ஆத்ம நந்தி:
கொடி மரத்தருகில் இருப்பது (இறைவன்) பதி, ஆத்மநந்தி – பசு, கொடிமரம் – பாசம்) பிரதோச காலத்தில் வழிபாட்டிற்குரியது ஆகும் ஆத்மநந்தி (அ) சிலாத நந்தி.
5. தரும நந்தி:
தருமம் நந்தியாக நிலைத்திருப்பது தரும நந்தி மகா மண்டபத்தில் உள்ளது சுவாமி (சிவபெருமான்) அருகில் உள்ளது சிறியதாக மூலவரின் வயிற்றுப்பகுதியான தொப்புள் பகுதியை உயிர்நிலையாகக்கொண்டு அதன் மட்டத்திலிருந்து நேராக நந்தி நாசி அமைந்து மூலவருக்கு உயிர்நிலை தருவதாக அமைந்து என்றும் ஆனந்த நிலையில் உள்ளார் இதன் மூச்சு காற்று சுவாமியின் (சிவபெருமானின்) மீது படுகிறது.
மேலும் இரு நந்திகள்:
1. அதிகார நந்தி – உட்கோபுர வாயிலில் வடக்கு நோக்கி இருப்பது ஆகும்.
2. விருஷப நந்தி – கருவறை பின்புறம் இருப்பது ஆகும்.
நந்தி பெருமானின் சிறப்புகள்:
நந்தி என்ற சொல்லுக்கு ‘ஆனந்தமாக இருப்பவன்’ என்று பொருள். பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் கொள்ளலாம்.நந்திக்கு அதிகார நந்தி என்ற பெயரும் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் நாயகனான சிவபெருமான், நந்திக்கு அத்தனை அதிகாரங்களையும் வழங்கியுள்ளார். நந்தி தேவருக்கு சிவபெருமானைப் போலவே நெற்றிக் கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும் இரு புஜங்களிலும் மானும், மழுவும் உண்டு.
நந்தி தேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம்; ரன் என்பது ஓட்டுபவன்; துக்கத்தை ஓட்டுபவன் என்பது பொருள். நந்தி தேவரே உலகின் முதல் குரு. அவரிடம் அனங்கன், இந்திரன், சோமன், கந்தர்வர்கள் போன்ற தேவர்கள் வேதங்களைக் கற்றார்கள். சிவன், சக்தி இருவர் முன்னும் பரமானந்தராக இருப்பவர் நந்தி தேவர். சிவபெருமானின் முக்கண் பார்வைக்கு எதிரில் நிற்க நந்தி தேவரைத் தவிர வேறு யாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.
