Saturday, October 28, 2023
HomeArthamulla Aanmeegamசாதம் வடிக்கும் போது இதை மட்டும் செய்யக் கூடாது!

சாதம் வடிக்கும் போது இதை மட்டும் செய்யக் கூடாது!

சாதம் வடிக்கும் போது இதை மட்டும் செய்யக் கூடாது!

ஆணோ, பெண்ணோ வீட்டில் சாதம் வடிப்பது கண்டிப்பாக இருக்கும். சாப்பாடு இல்லாத நாளே இருக்காது. ஒரு வேளையாவது சாப்பாடு வடிப்போம். அப்பைட் நாம் சாப்பாடு வடிக்கும் போது இந்த தவறை மட்டும் செய்யக் கூடாது. அப்படி நாம் தவறு செய்துவிட்டால் அது அன்னப்பூரணியை அவமானப்படுத்தியதற்கு சமம். வீட்டில் காலை மற்றும் மாலையில் இட்லி, தோசை, பூரி, பொங்கல், சப்பாத்தி என்று டிப்பன் வகைகள் செய்வது வழக்கம்.

இதுவே கிராமப் பகுதியாக இருந்தால் காலையே சாப்பாடு செய்துவிடுவார்கள். வெளியில் தனியாக தங்கியிருக்கும் ஆணாக இருந்தால் அவர்களும் சாதம் வடிக்கத் தான் செய்வார்கள். சாதம் வேகும் போதும் சரி,சாதத்தை வடித்த பின்பும் சரி, இந்த தவறுகளை ஆண்களும் செய்யக் கூடாது, பெண்களும் செய்யக் கூடாது.

அது என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். சாதம் வடிக்கும் போது முதலில் சாதம் வடிப்பதற்கான உலையை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு தான் அரிசியை உலையில் போட வேண்டும். அரிசியை கழுவும் போது அதிலிருந்து அரிசியை எடுத்து வாயில் போட்டு எச்சில் பண்ணக் கூடாது. அரிசியை உலையில் போட்ட பிறகு சாப்பாடு வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு மற்ற கரண்டிகளை பயன்படுத்துவது தவறு தான். சாப்பாட்டிற்காக அன்ன கரண்டி என்று இருக்கும் அல்லவா? அதைத் தான் நாம் பயன்படுத்த வேண்டும்.

சாப்பாட்டை கலந்த பிறகு அந்த கரண்டியை சாப்பாட்டு பானையின் தலைப்பகுதியில் தட்டுவார்கள். அப்படி செய்யக் கூடாது. அப்படி செய்வது என்பது அன்னப்பூரணியின் தலையில் அடிப்பதற்குச் சமம். சாப்பாடு பரிமாறி விட்டு, அந்த கரண்டியில் ஒட்டிக் இருக்கும் சாப்பாட்டை, சாப்பாட்டு பானையில் விழ வைக்க வேண்டும் என்பதற்காகவும், கரண்டியை சாப்பாட்டு பானையின் தலையில் தட்டக் கூடாது என்று சொல்லப்படுகிறது. சாதத்தை வடித்து நிமிர்த்திய பின்பு, சாதம் வடித்த தட்டில், சாதம் ஒட்டியிருக்கும். நம் பாட்டிமார்கள் அதை எல்லாம் எடுத்து சாப்பாட்டு பானையில் ஒன்றாக போடுவார்கள். இது எதற்கு தெரியுமா?

அந்த தட்டில் இருக்கும் அரிசி பருக்கைகள், அதாவது சாப்பாட்டு பருக்கைகள் எல்லாம் தட்டில் தனித்தனியாக இருந்தால் உலர்ந்து போய்விடும். காய்ந்த தன்மைக்கு வந்துவிடும். மொறுமொறுவென்று குத்தும் அளவிற்கு மாறிவிடும். இப்படி சாதத்தை காய விடுவது அன்னபூரணியை அவமானப்படுத்தியதற்கு சமம். அன்னபூரணியை உலர த்ததற்கு சமமாக நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இந்த தவறை நீங்கள் செய்து வந்தீவர்களானால், தயவு செய்து இனிமேல் அப்படி செய்யாமல் உங்களை நீங்களே திருத்திக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் அந்த சாத பருக்கைகள், சாதத்தில் கலந்து வாய்க்குள் சென்று, தொண்டைக்குள் சென்று குத்திக் கொண்டால் பிரச்சனையாகி விடும் என்பதை மறந்து விடாதீர்கள். சாதம் பரிமாறும்போது அன்ன கரண்டியை கொண்டு தான் பரிமாறவேண்டும். சாப்பிட்டு முடித்த பின்பு அதில் இருக்கும் அன்ன கரண்டியை எடுத்து வெளியில் வைத்து காய விடக்கூடாது. அன்ன கரண்டியை சாதத்தின் உள்ளேயும் போட்டு மூடக்கூடாது. அந்த கரண்டியை காய விடாமல், சிங்கில் போட்டு தண்ணீர் ஊற்றி தான் போடவேண்டும். உலர விடக்கூடாது.

நீங்கள் குக்கரில் சாதம் வைப்பவர்களாக இருந்தாலும் இதே முறைதான். குக்கரில் சாதத்தை வடித்து விட்டு அப்படியே விட்டு விட்டோமேயானால், அந்த சாதம் கொஞ்சம் கொஞ்சமாக உலர ஆரம்பிக்கும். அதாவது, வடித்தவுடன் சூடாக இருக்கும் போது மென்மையான தன்மையை சாதம் கொண்டிருந்தாலும், அந்த பாத்திரத்திலேயே விட்டுவிட்டு, பிறகு சிறிது நேரம் கழித்து பார்த்தோமேயானால் அந்த சாதம் கொஞ்சம் வறண்டு இருக்கும்.

ஆகையால் பாத்திரத்தில் இருந்து சாப்பாட்டை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றுவது நல்லது. குக்கரில் விசில் வரும் போது, சாதம் சிதறி இருக்கும். அந்த சாதத்தையும் உலர வைக்காமல், குக்கரின் மூடியை உடனடியாக கழுவி விட வேண்டும்.

ஒரு சாப்பாடு வடிக்கும் பானைக்கு இத்தனை வழிமுறைகளா என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். அது வெறும் பாத்திரம் மட்டுமல்ல. அன்னப்பூரணி. அன்னத்திற்கு அரசி. அவள் வாசம் செய்யக் கூடிய அந்த சாப்பாட்டு பாத்திரத்தைக் கூட நாம் முறையாக பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =

Most Popular