Friday, October 27, 2023
HomeArthamulla Aanmeegamபணப்புழக்கத்தை அதிகரிக்கும் பச்சை கற்பூரம்!

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பச்சை கற்பூரம்!

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பச்சை கற்பூரம்!

தெய்வீக சக்தி வாய்ந்த பச்சை கற்பூரத்துக்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிக அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய ஈர்ப்பு சக்தி உண்டு. இரண்டு அல்லது நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி, சந்தோஷம் இருக்கும்.

கெட்ட சக்திகள் அண்டாது:

ஒரு வீட்டில் நிம்மதி இன்றிப் போகக் காரணமே அந்த வீட்டில் இருக்கக்கூடிய துர்சக்திகள் தான். பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்கக்கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியேறி விடும். அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும்:

அதுமட்டுமல்லாது, பச்சை கற்பூரத்துக்கு செல்வத்தினை ஈர்க்கும் தன்மை இருப்பதனால், வீட்டில் பணக் கஷ்டம் இல்லாமல், வீட்டில் பண நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதேபோல் வீண் செலவுகள் குறையும். ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாகக் கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வர, வீட்டில் பணப் புழக்கம் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை.

பச்சை கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும்போது, அங்கு சேரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். இரண்டு பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். அதேபோல், தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.

அதேபோல், வீட்டில் நடைபெறக்கூடிய அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம்பெறச் செய்வது நல்லது. குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வங்களையும் மனதார வணங்கி, நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும்.

இப்படிச் செய்வதால் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். வீட்டில் உள்ள துர்சக்திகள், கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி, செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும். நறுமணம் மிகுந்த இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்வாள். ஆதலால், பணம் புழங்கும் இடங்களில் வாசனைமிக்க பச்சை கற்பூரம் இருந்தால் செல்வம் செழிக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 9 =

Most Popular