மரணம் எப்படி ஏற்படுகிறது?
பிறப்பு என்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று உண்டு. பிறப்பிற்கும், இறப்பிற்கும் நாம் என்ன சேர்த்து வைக்கிறோமோ அதைத் தான் கொண்டு செல்வோம். உதாரணத்திற்கு பாவத்தை சேர்த்து வைத்தால் பாவத்தை கொண்டு செல்வோம், புண்ணியத்தை சேர்த்து வைத்தால் புண்ணியத்தை கொண்டு செல்வோம். ஆனால், இடைப்பட்ட காலங்களில் நாம் வாழும் வாழ்க்கை தான் மரணத்தை தீர்மானிக்கிறது.
ஒரு மனிதருக்கு மரணம் எப்படி நிகழ்கிறது என்றால், தொண்டைச் சளி, மண்டைச்சளி, நெஞ்சு சளி ஆகியவற்றால் தான் ஏற்படுகிறது என்று சித்தர் காக புசுண்டவர் கூறியுள்ளார். இவையெல்லாம் மனிதனின் உடலில் இல்லையென்றால் மரணமில்லை என்றும் கூறியுள்ளார். பால் பொருட்களான மோர், தயிர், வெண்ணெய், நெய் ஆகிய உணவுகளும், அசைவ உணவுகளும், சமைத்த தானிய உணவுகளும் சாப்பிடுவதால் தான் உடலில் நெஞ்சு சளி, தொண்டைச் சளி, மண்டைச் சலி உண்டாகிறது.
இவையெல்லாம் வெளியேறாமல் உடலிலேயே தங்கி விடுகிறது. இதுவே காலப்போக்கி விஷமாகி மனிதருக்கு இறப்பை ஏற்படுத்துகிறது. உப்பு சேர்க்காமல் சமைத்த காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை சாப்பிடுவதால் உடலில் சளி ஏற்படாது. சமையல் உணவுகளை தவிர்த்து, சமைக்காத தேங்காய், பழ வகைகளை உணவாக எடுத்துக் கொண்டு வாழ ஆரம்பித்தால், உடலில் தங்கியுள்ள அனைத்து சளிகளும் படிப்படியாக உடலிலிருந்து வெளியேறிவிடும். அதன்பின், சளி இல்லாத, நோயில்லாத, இறப்புக்கு வாய்ப்பில்லாத உடலாக அந்த உடல் மாறிவிடும்.
உணவு பழக்க வழக்கம் மட்டுமின்றி யோகாசனம், பிராணயாமம் என்று ஒவ்வொரு நாளும் செய்து வர மரணமில்லாத பெருவாழ்வு வாழலாம். நீர் உண்ணா நோன்பு (விரதம்), சாறு உண்ணா நோன்பு இருப்பதன் மூலமும் மரணமில்லா பெரு வாழ்வை அடைய முயற்சிக்கலாம். நீர் உண்ணா நோன்பு என்பது பசித்தபோதெல்லாம், அல்லது தேவை ஏற்படும்போதெல்லாம் எதுவும் சாப்பிடாமல், தூய்மையான குடி தண்ணீர் மட்டும் தேவையான அளவு அருந்துதல் வேண்டும்.
இப்படி எத்தனை நாட்கள் தொடர்ந்து வெறும் பச்சைத் தண்ணீரைக் குடித்து வாழ முடியுமோ அதுவரை வாழ்லாம்.
சாறு உண்ணா நோன்பு என்பது பசிக்கும் போதெல்லாம் அல்லது தேவை ஏற்படும் போதெல்லாம் எதுவும் சாப்பிடாமல், இளநீர், எலுமிச்சம் பழ ஜூஸ், தண்ணீருடன் தேன் கலந்து குடித்தல், திராட்சைப் பழ ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், தேங்காய்ப் பால், பேரீச்சைப்பழ ஜூஸ், மாதுளம் பழச் ஜூஸ் மற்றும் இதர பழச்சாறுகளில் ஏதேனும் ஒன்றை ஒருவேளைக்கு மட்டும் குடித்து, மற்ற வேளைகளில் மற்ற பழச்சாறு என அருந்தி இயன்ற நாட்கள் வரை வாழலாம்.
