கணக்கு வைத்து வாழ்ந்தால், கணக்கில்லாமல் செல்வம் கிட்டும்!
எப்போதும் வந்த செல்வத்தை மதித்து போற்ற வேண்டும். வராத வருமானத்தை எண்ணி ஏங்க கூடாது. அவற்றின் மீது ஆசையும் வைக்க கூடாது. என்னிடம் பணம் வந்தால் எப்போதும் ஏழை வாரி வழங்குவேன் என்று இறைவனிடம் திரும்ப திரும்ப சொல்ல வேண்டும்.
அப்படி சொல்வதோடு மட்டுமின்றி செயலிலும் காட்டினால் நீங்கள் தான் கோடீஸ்வரன் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? வரவு செலவு கணக்கை முறையாக வைத்திருப்பவர்களுக்கு கணக்கில்லாமல் செல்வம் வழங்க வேண்டும் என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும்.
- மற்றவர்களுக்கு பணத்தை கொடுக்கும் போது தலைப் பகுதியை நம் பக்கம் வைத்து கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் பணம் உங்களிடமே வரும்.
- வாடகைப் பணம், பலசரக்கு, கரண்ட் பில், பால் பாக்கி என்று நீங்கள் வைத்த பாக்கிகளை அடைக்கும் போது சீக்கிரம் என்னிடமே வந்த சேர் என்று என்று பிரியா விடை கொடுத்து அனுப்ப வேண்டும்.
- எப்படி ஈரம், ஈரத்தை ஈர்க்கிறதோ, அதே போன்று தான் உங்களிடம் இருக்கும் பணம் தான் புதிய பணத்தை ஈர்த்து வரும்.
- பர்ஸ், வங்கி, பீரோவில் பணம் இல்லாமல் இருக்க கூடாது. இருப்புத் தொகை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
- ஒரு கட்டத்தில் இருப்புத் தொகை காலியாகும் போது செலவை நிறுத்திவிட வேண்டும்.
- தினந்தோறும் உங்ளது கண்கள் பணத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், கைகள் பணத்தை எண்ணிக் கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பதோடும், எண்ணுவதோடும் நிறுத்திவிடக் கூடாது. மனதார நினைத்துக் கொள்ள வேண்டும்.
- என்னிடம் பணம் சேர வேண்டும், எனக்கு பணம் வர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
- வீடு, அலுவலகம், கல்லாப்பெட்டி, பணப்பை என்று செல்வம் புழங்க கூடிய எல்லா இடங்களும் தூய்மையாக இருக்க வேண்டும்.
- வணிகம், தொழில், அலுவலகப் பணிகளை விளையாட்டாக செய்ய வேண்டும்.
- எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். சிரிப்பவர்களிடம் செல்வ லட்சுமி வந்து கொண்டே இருப்பாள்.
- ஆபிரகாம் லிங்கன் படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பண வருமானம் குறையாது.
ஓம் ஹ்ரீம் க்ளீம்சௌம் ஸ்ரீம் கும்
குபேராய நரவாகனாயயக்ஷ ராஜாய தன
தான்யாதிபதியே லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம் ஓம்
குபேராய நமஹ!
இந்த குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்து 7 முறை உச்சரித்து குபேரனை வேண்டிக் கொள்ள வேண்டும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லி வணங்கி வந்தால் வருமானம் அதிகரிக்கும்.
