சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வது சிறந்ததா? அல்லது நம் பெயருக்கு அர்ச்சனை செய்வது சிறந்ததா?
கோயில்களில் பலர் சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்து விடுங்கள் என்று சொல்கின்றனர். ஆனால் உண்மையில் பகவான் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நமது பெயரை சொல்லி தான் அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்யும் சமயத்தில் உங்களது பெயர், கோத்திரம், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை சொல்லியே அர்ச்சனை செய்வது வழக்கம். அப்படி உங்களது ராசிப்படி எப்படி இறைவனுக்கு அர்ச்சனை செய்வது? என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்கள், குறிப்பாக வளர்பிறை நாளில் வரும் செவ்வாய்க்கிழமையில் சிவப்பு மலர்கள் கொண்டு முருகப்பெருமானை அர்ச்சனை செய்வது சிறப்பு.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்கள், வளர்பிறை வெள்ளிக்கிழமை சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடி விட்டு வெண்தாமரை மலர் கொண்ட மகாலட்சுமியை அர்ச்சனை செய்வது சிறப்பு. (சுக்கிரனுக்கு உரிய நேரம் நல்ல வெண்மை)
மிதுனம்:
இந்த ராசியில் பிறந்தவர்கள் வளர்பிறை புதன்கிழமை சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடி விட்டு திருமாலை துளசி சாற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.
கடகம்:
இவர்கள் பௌர்ணமி வரும் நாளில் அம்பாளுக்கு வெள்ளை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.
சிம்மம்:
இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆவணி மாதம் வரும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையில் வில்வம் கொண்டு ஈசனை அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் விசேஷம்.
கன்னி:
ராசியில் பிறந்தவர்கள் குறிப்பாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமையில் திருமாலை துளசி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.
துலாம் :
துலாம் ராசியில் பிறந்தவர்கள் ஐப்பசி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில், சிவப்பு தாமரை மலர் கொண்டு மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் சிறந்த பலன்களை பெற்றுத் தரும்.
விருச்சிகம் :
இந்த ராசியில் பிறந்தவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமையில் முருகனை சிவப்பு மலர் சாற்றி அர்ச்சனை செய்து வழிப்பட துன்பங்கள் விலகி., நன்மைகள் நடந்தேறும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் மார்கழி மாதத்தில் வரும் வியாழக்கிழமையில், குரு பகவானுக்கு அல்லது தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்துவர வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்:
இந்த ராசியில் பிறந்தவர்கள் குறிப்பாக தை மாதத்தில், சனிக்கிழமையில் ஈசனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்கள் மாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமையில் ஈசனுக்கு பால் அபிஷேகத்துடன் வில்வ அர்ச்சனை செய்து வழிபட வாழ்வில் உள்ள தடைகள் அகழும்.
மீனம்:
இந்த ராசியில் பிறந்தவர்கள் பங்குனி மாதத்தில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற பூக்கள் கொண்ட அர்ச்சனை செய்வது சிறப்பு. படிக்கும் ஏழை மாணவ மாணவியர்களுக்கு புத்தக நோட்டை வாங்கித் தர அவர்கள் வாழ்வில் உள்ள துன்ப துயரங்கள் விலகும்.
