கலியுகமும் தற்போதைய சூழலும்

234

கலியுகம் பிறந்த கதை ஹிந்துக்களின் தலையாய நூல்களில் ஒன்று ஸ்ரீமத் பாகவதம் எனும் புரான நூலில் காணபடுகிறது..

புரான நூல்களின் கருத்தின்படி மகாபாரதம் எனும் காவியம் தோன்றிய குருக்ஷேத்திரம் எனும் பூமியில் துவாபர யுகம் முடிவுற்றது, ஆனால் கலியுகம் அங்கேயே தொடங்கிவிட்டது தெரியுமா உங்களுக்கு?!, இந்த புரான கதையில் பல கிளைகள், அதில் மிக முக்கியமான கிளை கதை தான் மஹாராஜா பரீக்ஷித் மற்றும் கலிபுருஷனின் கதை..

மகாபாரத யுத்தத்தின் 9 ம் நாள் வரை ஒரு அப்பாவியும் இறக்கவில்லை, 9 ம் நாளில் தான் துவாபர யுகம் முடிந்து கலியுகம் தோன்றியது, அதன் பின்பே குருக்ஷேத்திர யுத்தத்தில் அழிவு ஆரம்பமானது இது கலியுகத்தின் முன்னோட்டமே..

கிருஷ்ணர் இருந்ததால் கலிபுருஷனால் உலகம் முழுவதும் பரவ இயலவில்லை, யுத்தத்தில் மட்டுமே கலிபுருஷனால் பரவ முடிந்தது, அபிமன்யுவின் மகனும், அர்ஜுனனின் பேரனுமான மஹாராஜா பரிஷித்தின் இறப்பில் கலியுகம் ஆரம்பமானது, மஹாராஜா பரிஷித் தன் அம்மா உத்தராவின் கருவிலேயே கொல்லபடவேண்டியவர் ஆனால் கிருஷ்ணர் உத்தராவின் கருவுக்குள் புகுந்து மஹாராஜா பரிஷித்தை காத்தார்..

யுத்தம் முடிந்து சில காலத்தின் பின்பு பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் தன் உடலை நீத்த செய்தி எட்டியது, அதனால் மணம்வருந்திய பாண்டவர்கள் ராஜியத்தை பாண்டவர்களின் ஒரே பேரனான மஹாராஜா பரிஷித்திடம் ஒப்படைத்தனர்..

மஹாராஜா பரிஷித்திர்க்கு ஒரு நாள் கலிபுருஷன் வந்திருப்பதாக செய்தி எட்டியது, உடனடியாக தன் ராஜியத்தில் உள்ள அனைத்து வீரர்களையும் தயார் செய்தார், பேராசை, ஆணவம், தீய சிந்தனைகளுடன் தன் ராஜியத்தில் கால் வைத்த கலி புருஷனை தடுத்து நிறுத்தி கைது செய்தார்..

கலிபுருஷன் மஹாராஜா பரிஷித்திடம் உரையாடினான்:

மஹாராஜா பரிஷித் அவர்களே பிரம்மா 4 யுகங்களை படைத்தார், சத்திய, திரேத, துவாபர, கலி யுகம், சத்திய யுகம் 17,28,000 வருடங்களும், திரேத யுகம் 12,96,000 வருடங்களும், துவாபர யுகம் 8,64,000 வருடங்களும் சுகமாக அனுபவித்தீர்கள், இப்போது கலி யுகம் 4,32,000 வருடங்கள் ஆட்சி செய்ய நான் வந்துள்ளேன், ஆனால் நீங்களோ என்னை ராஜியத்தை விட்டு போக சொல்கிறீர்கள் என்றான்..

பிரம்மாவின் கட்டளையை மதிக்க வேண்டும் என்று உணர்ந்த மஹாராஜா பரிஷித், கலி புருஷனிடம் மனித குலத்தை அழிவு நெருங்கும் வரை அழிக்க வேண்டாம் என்று கட்டளை இட்டார், மேலும் கலி புருஷன் இந்த யுகத்தில் 5 இடத்தில் வசிக்க தன் நாட்டில் இடம் தருவதாக வாக்களித்தார், அந்த 5 இடங்களுக்கு வரும் மனிதர்களை கலி புருஷன் அழிக்கலாம் என்று அனுமதி அளித்தார், அதே போல் கலி புருஷன் எந்த மனிதனையும் கட்டாயபடுத்தியோ, மூளை சலவை செய்தோ இந்த 5 இடங்களுக்கு வரவழிக்க கூடாது என்றும், அவர்களாக வரும் மனிதர்களை மட்டுமே உன் இஷ்டம் போல் ஆளவேண்டும் என்றும் கட்டளை இட்டார்..

மஹாராஜா பரிஷித் குறிபிட்ட 5 இடங்கள்:

விபச்சாரம் செய்யும் இடம்( ஆசையின் நுழைவாயில்): இங்கே நுழையும் எவரும் தன் மானம், மரியாதை, மனிததன்மையை இழப்பார் அதன் பிறகே நீ அவர்களை தண்டிக்க வேண்டும்..

மிருகங்கள்/மனிதன் வெட்டபடும் இடம்(மிருகதன்மையை வெளிபடுத்துமிடம்): யார் ஒருவர் இங்கே நுழைகிராரோ அவர் மனித தன்மையை இழக்கிறார், தன்னிடம் உள்ள மிருக தன்மையை வெளிபடுத்திக்கிறார் ஆகவே இவரை நீ தாராளமாக தண்டிக்கலாம் என்றார்..

சூதாடும் இடம்(தன் அழிவை தானே தேடிக்கொள்ளுமிடம்): இங்கே வரும் மனிதர் தன் வாழ்க்கையை சூதாட வருகிறார் ஆகவே இவர்களை நீ அழிப்பதில் தவறேதுமில்லை என்றார்..

குரு/முனிவர்களை அவமதிக்குமிடம்: இவர்களை நீ அழிக்கலாம் ஏனெனில் இவர்களால் தர்மம் தழைக்காது..

இதை கேட்டுக்கொண்டு இருந்த கலிபுருஷன் மஹாராஜா பரிஷித்திடம் ஒரு கேள்வி எழுப்பினார்: மஹாராஜா நீங்கள் குறிபிடும் இடங்களில் தீயவர்கள் எப்படியும் வருவார்கள் ஆனால் நல்லவர்களை நான் எப்படி அழிப்பது?, அப்படி அழித்தால்தானே என் ஆணவம் எனும் ஆயுதம் பயன்படுத்தியதாகும்?, இதை கேட்ட மஹாராஜா பரிஷித் ஒரு இடத்தை கலி புருஷன் உபயோகிக்க அனுமதித்தார் அதுவே தங்கம் இருக்கும் இடம்..

இறுதியாக கலிபுருஷனுக்கு ஒன்று விளங்கியது தான் மொத்த ராஜியத்தையும் அபகரித்து விட்டோம், ஆனால் மஹாராஜா பரிஷித் உயிருடன் இருக்கும் வரை தான் ஆளா இயலாது என்பதை புரிந்துகொண்டான், மஹாராஜா பரிஷித் கொடுத்த இடத்தை வைத்தே மஹாராஜா பரிஷித்தை அழிக்க திட்டமிட்டான், மஹாராஜா பரிஷித் அணிந்து இருந்த தங்க கீரிடத்தின் புகுந்து மஹாராஜா பரிஷித்தை கொன்றான், அதற்க்கு அவன் கூறிய காரணம் மஹாராஜா பரிஷித் முனிவரை அவமதித்துவிட்டார் என்று பொய்யுரைத்தான்..

குறிப்பு: மேல் கூறிய கதை நீங்கள் அறிந்ததாக இருக்கலாம், பலர் இதை பதிவிட்டு இருக்கலாம், நான் இதை பதிந்ததின் நோக்கம் “தங்கம்” தற்போதைய சூழல்(தொற்று பரவல்) ஏற்படுவதற்க்கு முன்பு தங்கத்தின் விலை மிக அதிகமானது யாரும் மறந்திருக்க முடியாது, அதே போல் இந்த சில வருடங்களாக தான் மனிதன் தங்கத்தின் மீது அதீத மோகம் கொண்டு அலைகிறான் என்பதையும் யாரும் மறுக்க இயலாது, மேலும் தங்கம் ஏற்றுமதி அதிகம் செய்யும் நாட்டின் பட்டியலையும் இந்த பதிவுடன் இணைத்துள்ளேன், இதில் ஒரு உண்மை வெளிபட்டது பட்டியலில் உள்ள நாடுகளில் தான் தற்போதைய தொற்று வீரியம் அதிகமாக உள்ளது, மேலும் இதில் இந்தியா தங்கம் அதிகம் வாங்கும் நாடு அதனால் தான் இந்தியாவில் இவ்வளவு தாக்கம், மேலும் தங்க சுரங்கம் அதிகம் கொண்ட நாடுகளில் “சீனா” 1 ம் இடத்தை வகிக்கிறது, தொற்று சீனாவில் இருந்தே பரவியதாக கூறபடுகிறது இங்கே கவனிக்க வேண்டியது, தங்க சுரங்கம் அதிகம் கொண்ட நாடுகள் அனைத்திலும் தொற்றின் தாக்கம் அதிகமுள்ளதை கவனிக்க வேண்டும்(பட்டியல் இணைத்துள்ளேன்), மேலும் இப்போதும் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயரும் என்று பல வல்லுனர்கள் கருத்துறைத்துள்ளனர், இதில் இருந்து என்ன தெரிகிறது நமது புராணங்கள் மெய் என்பது நிரூபணமாகிறது, சர்வம் கிருஷ்ணார்ப்பணம்…