கவுளீபாய் சிவனை சகோதரனாக வணங்கியவர்.

87

சோழிக்கு இந்தியில் கவுளீ என்று பெயர்.
காசி விஸ்வநாதரை தன் சகோதரனாகப் பாவித்து தினமும் கங்கா ஸ்நானம் செய்து, மிக சுத்தமாக பகவானைத் தரிசிப்பார்கள்.
சிவனை சாதாரண மனிதர்களும் தொட்டு கட்டி அணைத்து கும்பிடுவது அவர்களுக்கு பிடிக்காமல் அதனை தடுத்து நிறுத்த முயற்சித்தார்கள்.
ஒரு நாள், சிவபெருமான்,
“நான் வாழும் காசி எப்போதும் சுத்தமானது.
இங்கு
திருஷ்டி தோஷம்,
ஸ்பர்ச தோஷம்
எதுவும் கிடையாது. அதனால் நீ இவ்வளவு ஆசாரம் பார்க்க அவசியமில்லை.” என்றார்.
கவுளீபாய் சிவன் சொன்னதை
காது கொடுத்து கேட்கவில்லை.
அவர்கள் குளித்து மடியாக வரும்போது, ஒருவர் அவர்கள் மேல் பட, மீண்டும் குளியல் செய்தார்கள்.
எதிரில் ஒரு பிணம் வர, மீண்டும் கங்கையில் மூழ்கி எழுந்து வந்தார்கள்.
அச்சமயம் வேறொருவர் மேலே பட… இவ்வாறு பல முறை குளித்து குளித்து பாதி இரவாகி விட, விசுவநாதர் ஆலயம் மூடப்பட்ட்து.
பகவான் அவர்கள் முன் தோன்றி, “உனக்கு ஒரு சுத்தமான இடம் காட்டுகிறேன். இங்கு இரு.” என்று ஓரிடத்தில் கொண்டு விட்டார்.
காலையில் எழுந்து பார்த்தவள், அது சேரி என்று அறிந்தார்கள்.
சோளியம்மன் தன தவறை உணர்ந்து சிவனிடம் பாப விமோச்சனம் கேட்டார்கள்.
சாபத்தை திரும்ப பெற முடியாது என்றார்.
இது இறைவனின் லீலை என்று உணர்ந்து, “ இங்கிருந்து கொண்டு உன் ஆலயம் வர எனக்கு மனமில்லை. ஆனால், உன் தரிசன பலன் கிடைக்க ஒரு வழி சொல்ல வேண்டும்.” என்று விசுவநாதரை வேண்டினார்கள்.
விசுவநாதரும்
“காசிக்கு வரும் பக்தர்கள் என்னை தரிசிப்பவர்கள் உன்னையும் தரிசித்து வணங்குவதால் ஏற்படும் புண்ணியத்தின் ஒரு சோழி அளவை உனக்கு தருவார்கள்.
அந்த புண்ணியத்தின் பலனாக பாபவிமோசனம் உனக்கு கிடைக்கும், உன்னை தரிசிக்காத யாத்திரை பலனில்லை” என்று கூறினார்.
அதனால் காசிக்குச் செல்வோர் யாத்திரை முடிந்த பின்பு கவுளீபாய் ஆலயம் சென்று, காசியில் தங்கிய நாட்கள் எத்தனையோ அத்தனை சோழிகளை வாங்கி
ஒரு ரவிக்கைத் துண்டுடன் கொடுக்க வேண்டுமாம்.
ஒரு சோழியை எடுத்து கப்பில் வைத்துக் கொண்டு மற்ற சோழிகளை அந்த ரவிக்கைத் துண்டுடன் அம்மன் மேல்
மூலஸ்தானத்தில் போட வேண்டும்.
அப்படிப் போடும்போது குருக்கள் ஒருமந்திரம் சொல்கிறார்.
“காசீ பலம் ஹம்க்கு; கவுளீ பலம் தும்க்கு” அதன் அர்த்தம் காசி புண்ணியம் எங்களுக்கு, சோழி புண்ணியம் உனக்கு என்று .முடிக்கிறார்.
அந்த ஒரு சோழியை ஊர் வந்ததும் பூஜை அறையில் சுவாமியிடம் வைக்க வேண்டுமாம்.
இறைவனுக்கு முன்
மனிதரில் உயர்ந்தவர்,
தாழ்ந்தவர்,
தீண்டப் படாதவர்
என்பதெல்லாம் கிடையாது என்பது இறைவன் வாயிலாகவே உலகுக்கு உணர்த்தப் பட்டிருப்பது இதன் மூலம் அறியப்படுகிறது.
சிவ ! சிவ !