மாங்கல்ய காணிக்கையின் மகத்துவம்!
திருமண வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதற்காக, தன்னுடைய மஞ்சள் குங்குமத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக, தன் கழுத்தில் அணிந்திருக்கும் மாங்கல்யத்தை, கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்வார்கள்.
இது ஒரு மிகப்பெரிய வேண்டுதல். இப்படிப்பட்ட வேண்டுதலை இறைவனிடம் வைக்கும் பட்சத்தில், அதற்கான பலன் கைமேல் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பெண்கள் மாங்கல்ய காணிக்கை செலுத்துவதில் எந்த ஒரு தவறும் இல்லை
சொல்லப்போனால், மாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்தினால், அவர்களது இல்லற வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் அனைத்தையும், அந்த ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், நம்மில் பல பேருக்கு தெரியாத சாஸ்திரம் இதில் மறைந்துள்ளது.
ஒரு பெண்ணினுடைய ஜாதகத்தில் ஏதோ ஒரு தோஷம் இருப்பதால் தான், கணவரோடு தீர்க்கமுடியாத பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறாள். அந்த தருணத்தில் அந்த தோஷம் நீங்குவதற்காக, தான் கட்டியிருக்கும் திருமாங்கல்யத்தை எடுத்து, இறைவனின் சந்நிதானத்தில் இருக்கக்கூடிய உண்டியலில் சேர்த்து விடுகின்றாள். அப்போது, அவளுக்கு இருந்த தோஷம் நீங்கி விட்டது என்பதுதான் அர்த்தம்*
திரும்பவும் புதியதாக ஒரு திருமாங்கல்யத்தை செய்து அந்தப் பெண், கழுத்தில் அணிந்து கொண்டால், அந்த தோஷமானது திரும்பவும், அந்தப் பெண்ணிடமே வந்து விட்டது என்று தானே அர்த்தம். ஆகவே, திருமாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்திய பெண்கள், மீண்டும் புதிய திருமாங்கல்யத்தை செய்து கழுத்தில் போட்டுக் கொள்ளக்கூடாது, என்ற குறிப்பு நம்முடைய சாஸ்திரத்தில் உள்ளது.
அதாவது, அவரவர் குடும்ப வழக்கப்படி, கருமணி அல்லது சிவப்பு மணி, நாணல், மஞ்சள் கயிறு, மாங்காயைப் போட்டு இவைகளை எல்லாம் போட்டுக் கொள்ளலாம். ஆனால், அந்தத் தாலி குண்டுகள் இருக்கும் அல்லவா? அந்த குண்டுகளை மட்டும், புதியதாக செய்து போட்டுக் கொள்ளக்கூடாது. அதற்கு பதிலாக மகாலட்சுமி தாயார் இருப்பது போன்ற டாலரை அணிந்து கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
சிவபூஜைக்கான மாதங்களும், மலர்களும் பற்றிய பதிவுகள்:
முதற்கடவுள்களில் ஒருவரான சிவனின் வடிவத்தில் மிக முக்கியமானது லிங்க வழிபாடு ஆகும். பொதுவாக கடவுள் வழிபாட்டின்போது மலர்கள் இன்றியமையாததாக உள்ளது. சிவன் வழிபாட்டில் எந்த மாதங்களில் எந்த மலர்களால் பூஜை செய்யலாம் என்று பார்ப்போம்.
சித்திரை – பலாசம்
வைகாசி – புன்னை
ஆனி – வெள்ளெருக்கு
ஆடி – அரளி
ஆவணி – செண்பகம்
புரட்டாசி – கொன்றை
ஐப்பசி – தும்பை
கார்த்திகை – கத்திரி
மார்கழி – பட்டி
தை – தாமரை
மாசி – நீலோத்பலம்
பங்குனி – மல்லிகை
அதேபோல் ஒவ்வொரு மாத பவுர்ணமிகளில் பின்வரும் பூக்களை கொண்டு வழிபாடு செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்.
சித்திரை – மரிக்கொழுந்து
வைகாசி – சந்தனம்
ஆனி – முக்கனிகள்
ஆடி – பால்
ஆவணி – நாட்டுச்சர்க்கரை
புரட்டாசி – அப்பம்
ஐப்பசி – அன்னம்
கார்த்திகை – தீபவரிசை
மார்கழி – நெய்
தை – கருப்பஞ்சாறு
மாசி – நெய்யில் நனைந்த கம்பளம்
பங்குனி – கெட்டித்தயிர்
இதை செய்து சிவ பெருமானை வழிபட்டால் எல்லா செல்வ வளங்களையும் பெற்று நிம்மதியாக வாழலாம்.
