முருகன் ஏன் இரண்டு திருமணம் செய்துக் கொண்டார் தெரியுமா..!!?

135

தமிழ்க் கடவுள் முருகன் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் முருகப் பெருமான் ஏன் இரண்டு திருமணங்களைச் செய்துக் கொண்டார் என்பதை அறிவீர்களா?
அந்த இரண்டு பெண் தெய்வங்களுக்கும் உள்ள தொடர்புகள் என்ன?
எவ்வாறு முருகன் திருமணம் செய்துக் கொண்டார்?
அவர் அவ்வாறு திருமணம் செய்துக் கொண்டதன் நோக்கம் என்ன?
உள்ளிட்ட அனைத்து வினாக்களுக்கும் விடையை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
செந்தமிழ் வேந்தனின் தெய்வீக காதல்களை அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்!
முருகனின் இரண்டு மனைவிகள்..
புராணக் கதைகளின் படி முருகன் இரண்டு பெண் தெய்வங்களைத் திருமணம் செய்து கொண்டார்.
முதலாவதாக வள்ளியைத் திருமணம் செய்துக் கொண்டார்.
வள்ளி பழங்குடி இனத் தலைவரின் மகள். பழங்குடி இனத் தலைவர் கிழங்கைப் பறிப்பதற்காக குழியைத் தோண்டும் போது குழந்தையாக வள்ளி அவருக்குக் கிடைத்தார்.
இரண்டாவதாக இந்திரனின் மகளான தெய்வாயனையைத் (தேவசேனா என்றும் அழைக்கப்படுகிறார்) திருமணம் செய்துக் கொண்டார்.
முருகனின் இரண்டு மனைவிகளான வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோர் இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தி ஆகியவற்றைக் குறிக்கின்றனர். அதாவது விருப்பத்தின் சக்தியாகவும் செயல்களின் சக்தியாகவும் இருக்கின்றனர்.
​முருகனின் கடந்த காலம்
வள்ளி மற்றும் தெய்வானை இருவரும் முந்தைய பிறவியில் பெருமாளின்(விஷ்ணு) மகள்களாக பிறந்தனர்.
சகோதரிகளாகிய இருவரும் பல தவங்களைப் புரிந்தனர் இறைவன் முருகனைத் திருமணம் செய்வதற்கு, அவ்வாறே மனைவிகளாகவும் மாறினர்.
அடுத்தப் பிறவியில் அவருக்கு முன்னரே தோன்றி திருமணம் செய்யும் வரத்தைப் பெற்றனர்.
அவ்வாறு வள்ளி மலைகளின் தலைவனுக்குப் பிறந்து மலைகளின் கடவுளைத் திருமணம் செய்துக் கொண்டார்.
வள்ளியின் தந்தையிடம் முனிவர் நாரதர் இந்த வள்ளி முருகனின் மனைவியாவதற்குப் பிறந்தவள் என்ற செய்தியைத் தெரிவித்தார்.
​இரண்டு வகையான பக்திகள்
முருகன் இரண்டு வகையான நேர்மையான பக்தர்களின் வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக இருவரையும் திருமணம் செய்துக் கொண்டு தன் மீதான பக்தியின் சக்திகளை இந்த உலகத்திற்குத் தெரியப் படுத்தினார்.
வேதங்களில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துப் பக்தியாய் இருந்த ஒருவரையும், வழக்கமான பக்தியோடு நேர்மையாகவும் உணர்ச்சிகரமான அன்போடு இருந்த ஒருவரையும் திருமணம் செய்து பத்தியின் பெருமையை உணர்த்தினார்‌.
தெய்வானையும் வள்ளியும் இந்த இரண்டு வகையான பாதைகளைப் பின்பற்றி இறைவனை அடைந்தனர்.
​வள்ளி – முருகன்
வள்ளி தனது முந்தைய பிறப்பில் விஷ்ணுவின் மகளாக இருந்தார்.
அவர் முருகனைத் திருமணம் செய்துக் கொள்ள கடுமையான தவம் புரிந்தார்‌.
வள்ளி உயிர்களின் அறியாமையை உணர்த்தும் குறியீடாக இருந்தார்‌‌.
தனது குருவான நாரதரின் வழிகாட்டுதலின் படி அறியாமையை அழித்து ஆன்மாவின் உன்னத விடுதலையைக் குறிக்கும் விதமாக முருகனுடனான வள்ளியின் திருமணம் குறிப்பிடப்படுகிறது.
இது வழக்கத்திற்கு மாறான முறையில் காந்தர்வா அல்லது பைசாச்சா போன்ற வகையான திருமணம் என்று விவரிக்கப்படுகிறது.
​​வள்ளியம்மை திருமணப்படலம்
பழந்தமிழின் இலக்கிய குறிப்புகளில் வள்ளியானவர் முருகனின் மணமகளாக இருந்துள்ளார்.
எனவே வள்ளி தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவராக இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
மலைமகளாக வலம் வந்து முருகனின் மனத்தினில் இடம் பிடித்த வரலாற்றை வள்ளியம்மை திருமணப்படலம் என்ற தலைப்பில் கச்சியப்பரின் ஆறாவது நூலான கந்த புராணத்தில் 267வது பாடலில் குறிப்புகள் உள்ளன.
இவை முருகனின் காதல் மற்றும் வேட்டுவரின் மகள் வள்ளியுடனான கூடலைப் பற்றிய கதையை விவரிக்கிறது.
​வள்ளி மற்றும் முருகனின் கதை
வள்ளியைக் காடுகளில் பார்த்த முருகன் அவருடைய அழகில் சொக்கிப் போய் ஒரு கம்பீரமான வேட்டைக்காரனாக தோற்றமெடுத்து வள்ளி முன்பு தோன்றினார். மலைகளின் தலைவர் வரும் நேரம் என்பதால் முருகனை மறைந்து இருக்குமாறு கடிந்துக் கொண்டார்‌.
அவ்வாறு தலைவர் சென்ற பின்பு மீண்டும் அதே உருவில் தோன்றிய முருகன் தனது காதலை வள்ளியிடம் தெரிவித்தார். ஆனால் வள்ளி அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
எனவே பின்னர் வயதான தோற்றத்திற்கு மாறி வள்ளியிடம் தனக்குப் பசிப்பதாக உணவு கேட்டார். வள்ளியும் திணையையும் தேனையும் கலந்து உணவாக கொடுத்தார்‌.
அவர் உண்ட பின்பு தண்ணீரையும் கொடுத்தார்‌. இதனை முருகன் கேலியாக இணையருக்குத் தாகம் தீர்ப்பதைப் போன்று இருக்கிறதே என்று கூறினார்.
ஆனால் அவருடைய கேலியைக் கேட்டு கோபமடைந்தார் வள்ளி.
இதனால் முருகன் தன் அண்ணன் விநாயகரின் உதவியை நாடினார்‌. விநாயகரும் யானையாக மாறி வள்ளியை அச்சமூட்டினார்.
யானைக்குப் பயந்து கிழவர் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினார். அந்த கிழவரிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கேட்டார்.
ஆனால் அவர் தன்னைத் திருமணம் செய்துக் கொள்ள ஒப்புக் கொண்டால் தான் காப்பாற்றுவேன் என்றார்.
பயத்தின் நடுக்கத்தில் இருந்த வள்ளி வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்.
பிறகு முருகன் தன்னுடைய உண்மையான உருவத்தை வெளிப்படுத்தினார்‌.
அதன்பிறகு தான் நான் இறைவனின் காதலி என்பதை உணர்ந்தார் வள்ளி. பிறகு எல்லோருடைய ஒப்புதலுடனும் இருவரின் திருமணமும் நடைபெற்றது‌.
​தெய்வானை_ முருகன்
முருகன் அசுரர்களை வென்ற பிறகு இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்‌.
தெய்வானை முந்தைய பிறவியில் விஷ்ணுவின் மகளான தெய்வானை முருகனைத் திருமணம் செய்துக் கொள்ள கடுந்தவம் புரிந்திருந்தார். தெய்வானையுடனான திருமணத்தை மரபுவழி திருமணம் என்கின்றனர்.
இந்த முறை வைதீக திருமண வகை என்று விவரிக்கப்படுகிறது.
இவ்வாறு முருகன் தனது இரு மனைவிகளுடன் இணைந்து மனித வாழ்க்கையின் மிக உயர்ந்த தத்துவத்தைக் கற்பிக்கிறார்.