Saturday, October 21, 2023
HomeArthamulla Aanmeegamஆன்மீக தத்துவத்தை உணர்த்தும் தெய்வங்களின் பெயர்கள்!

ஆன்மீக தத்துவத்தை உணர்த்தும் தெய்வங்களின் பெயர்கள்!

ஆன்மீக தத்துவத்தை உணர்த்தும் தெய்வங்களின் பெயர்கள்!

ஒவ்வொரு தெய்ங்களுக்கும் ஒவ்வொரு விதமான தத்துவம் உண்டு. அவை அனைத்துமே உடல், ஆன்மா தொடர்பு கொண்டது. உயிர் எழுத்துக்கள் 12ம் மாதங்களின் எண்ணிக்கையையும் குறிப்பிடுகிறது . இந்த உயிர் மனித நிலையிலிருந்து இறைவனை அடைய 12 நிலைகளை கடக்க மீண்டும் பிறவா நிலை. இதே போன்று மெய் எழுத்துக்கள் 18ம் இறைவனை அடைய வாழ்வில் மனிதன 18 தத்துவங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது.

மனிதனை படைக்கும் போதே அவனை ஆட்டுவிக்க 9 வகையான கிரகங்களையும் இறைவன் படைத்திருக்கிறான். மனிதன் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவும், கிரக நிலைகளின் பெயர்ச்சி காரணமாகவும் நன்மை, தீமை இரண்டும் செய்கின்றன. அந்த 9 கிரகங்களின் உட்பொருளின் வாயிலாக பாவம், புண்ணியம் என்று இரு வகையான தத்துவங்களை உணர்கிறான் அல்லவா, ஆகையால் 9 X 2 =18 தத்துவத்தை அவன் உணர வேண்டும் என்பது ஆகும்.

அதுமட்டுமின்றி சபரிமலையில் வாசம் செய்யும் ஐயப்பனை தரிசனம் செய்ய 18 படிகளை கடக்க வேண்டும். அஃகு என்பது ஆய்த எழுத்து இறைவன். ஒரு மாதம் என்பது உயிர் எழுத்து 12 + மெய் எழுத்து 18 + ஆய்த எழுத்து 1 ஆகியவை சேர்ந்தது தான். அதாவது 30 நாட்கள் அல்லது 31 நாட்கள். இந்த 30 நாட்கள் என்பது உயிரும் மெய்யும் 18 தத்துவத்தை கடைபிடித்து நல்ல வாழ்க்கை வாழ வேண்டும். 31 நாட்கள் என்பது இறைவனை அடையும் வழி காண வேண்டும். இதுதவிர, 60 வருடங்கள் என்பது தமிழ் ஆண்டுகளைக் குறிக்கிறது.

9 க்கு அடுத்தது 10. மனிதன் 9 கிரகங்கள் வழிவிட்டால் தான் இறைவனை அடைய இயலும். மனிதன் 6 கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டளை கடைபிடித்து வாழவும் கிரகங்கள் வழிவிடணும். (9 X 6= 54).
55 – கிரகங்கள் வழி விட்டு விட்ட பின்னர் பிரம்மன் (பாவ புண்ணிய கணக்கு சமமாகி விட்டது. இனி கணக்கு எழுத வழி இல்லை ) வழி விட.
56.- பிரம்மன் வழி விட்ட பின் சக்தியால் வழங்கப்பட்ட மாயை விளக்கி சக்தி வழி விடவேண்டும்.
57.- சக்தியின் மாயை விலகி விட்ட பின், வாழ்வதற்கான மாயை அளித்த நாராயணன் தான் மாயை விலக்கி, வழி விட வேண்டும்.
58 – மாயை நீங்கிய பின், மனிதனை ஆட்டுவிக்கும் அஞ்ஞானத்தை சங்கரன் விலக்கி வழி விடணும்.
59 – மெய் ஞானத்தை முழுமுதற் கடவுள் காண நாதன் அருள வேண்டும்.
60 – இறைவன் தன்னை அடைய மனிதனுக்கு கொடுத்த 6 கட்டளைகளை கடைபிடித்தானா என்று அலசி ஆராய்ந்து, முப் பெரும் தெய்வத்தின் அருள், தாயின் அருள் பெற்றிருப்பதை, ஞானத்தை பெற்றிருப்பதை உறுதி செய்தபின், அது அதுவாகவே ஆகும், என்ற தத்துவத்தை (எங்கிருந்து வந்ததோ, அங்கேயே அது சென்றடைய ) முருகப்பெருமான் வழி விடவேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + thirteen =

Most Popular