Saturday, October 14, 2023
HomeArthamulla Aanmeegamநடராஜ திரு மேனி சொல்லும் தத்துவங்கள்..

நடராஜ திரு மேனி சொல்லும் தத்துவங்கள்..

திருமுகம்:
எல்லையற்ற அழகும் இனிய தனித்திறமையு ம் தன்வசம் உள்ளதை கொண்டு தலைமைப் பாட்டினைக் குறிக்கும்.
பனிச்சடை:
சடை சிவநெறிக்குரிய தவ ஒழுக்கச் சிறப்பை யும் காட்டுகின்றதாகும் .
கங்கை:
இறைவன் பேராற்றலையும் வேகங்கெடுத்தா ளும் வித்தகத்தையும் விளக்குவது ஆகும்
பிறைசூடுதல்:
சரண் என அடைந்தவரைத் தாங்கித் தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல்தன்மையைக் குறிக்கிறது ஆகும்
குனித்த புருவம்:
பரதக் கலையின் உண்மையான நிலையை உணர்த்துவது ஆகும் அடியார்கள் தன் தவறை உணர்ந்து சிவபெருமானிடம் முழுவதுமாக சரணாகதி அடைவதும் முறையிடும் அடியார்க ளின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கி ஊன்றிக் கேட்டருளும் கருணைத் திறத்தினை காட்டுவது ஆகும்
குமிழ் சிரிப்பு:
அடைக்கலம் புகுந்தோரை எங்கு வந்தாய் என்று அருளோடு வரவேற்று, பிழைபொறுத்து வாழ்வளித்து மகிழ்விக்கும் பண்பைக் குறிப்ப து ஆகும்
பவளமேனி:
இறைவன் நீ வண்ணத்தான் நெருப்பை யொ த்தவன். நெருப்புத் தன்பால் எய்தும் பொருள்க ளை எல்லாம் தூய்மையாக்கிப் புனிதம் அடை யச் செய்வது போல, இறைவனும் தன் அடியா ர்களின் குற்றங்களை நீக்கி ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தையும் நீக்கி மாண்புற செய்யும் அருட்டிறத்தைக் குறிப்பது ஆகும்
“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே”
என்று திருநாவுக்கரசர் ( அப்பர்) நான்காது திருமுறையில் கூறியிருக்கிறார்
பால்வெண்ணீறு:
எப்பொருளும் இறுதியில் எய்தும் நிலை சாம் பல் தானே நீறு மற்றொன்றாக மாறி அழியாது ஆகவே பால்வெண்ணீறு தூய இயல்பினையு ம் அழியாத் தன்மையையும் குறிக்கின்றது.
“தொழுதெழுவார் வினைவளம் நீறெழ” இறை வன் நீறு அணிகின்றார். செந்நிற மேனியில் வெண்ணீறு அணிந்த கோலம் எவர் நெஞ்சை யும் கவர்ந்து பிணிக்கும் பான்மையுடையது ஆகும்
நெற்றிக்கண்:
மேல் நோக்கிய நிலையில் நிமிர்ந்து நிற்கும் நெற்றிக்கண் சிவபிரானின் தனிப்பெரும் முத ன்மையை உணர்த்துவது ஆகும் இது சிவபெ ருமானுக்குரிய சிறப்பு அடையாளம் ஆகும்
நீலகண்டம்:
ஒருவரும் உண்ணாத விஷத்தை உண்டும் இருந்தருள் செய்யும் இறைவனின் வியக்கத க்க செயலை குறிக்கும் நாகரிக நலனையும் பெருங்கருணைத் திறத்தையும் காட்டுவது ஆகும்
உடுக்கை:
உயிர்களை சிருஷ்டி செய்வது எனப்படும் உடுக்கை, இறைவன் உலகப் பொருள்களைப் படைக்கும் சிருஷ்டியைக் குறிப்பது ஆகும் பர நாதத்தைப் பரமன் தோற்றுவிக்கும் பான்மை யை இது காட்டுகிறது ஆகும்
நெருப்பு:
இறைவன் இடக்கரத்தில் ஏந்தியுள்ள நெருப்பு. உயிர்களின் துன்பங்களை இளைப்பினை நீக் கும் பொருட்டு செய்யும் சம்ஹாரத் தொழிலை க் காட்டுவது ஆகும்
அபயகரம்:
அமைந்தகை காத்தல் தொழிலைக் குறிப்பது ஆகும் அடியார்களுக்கு ஆறுதல் கூறி தேற்றும் நிலை இது ஆகும்
வீசியகரம்:
யானையின் துதிக்கையைப் போன்று திகழும் இவ்விடக்கை கஜஹஸ்தம் எனப்படும். இக்கை யின் விரல், தூக்கிய திருவடியைக் காட்டுகின் றது. திருவடியை நம்பி தொழுக. இது உம்மை ஈடேற்றும் என்பது குறிப்பு ஆகும்
எடுத்த திருவடி:
இறைவனின் இடது திருவடி இது; அம்பிகை க்கு உரியது. துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்டு தொண்டர் தம்மை இன்பக் கரை முகந்து ஏற்றும் திறத்தைக் காட்டுவது ஆகும்
ஊன்றிய திருவடி:
இறைவனின் வலது திருப்பாதம் இது. முயலக னை மிதித்து அவன் மீது ஊன்றிய நிலை மல த்தை முழுதாக அழித்து விடாமலும், மலத்தால் உயிர்கள் பெரிதும் வருந்தாமலும், வினைப் பயன்களை உயிர்கள் நுகர இறைவன் இயற் றும் மறைத்தல் தொழிலைக் குறிப்பது ஆகும்
முயலகன்:
இது ஆணவ மலத்தை குறிப்பது. முத்தி நிலை யில் உயிர்கள் மட்டும் ஆணவமலம் அடங்கிக் கிடப்பதைப் போன்று. முயலகனும் இறைவன் திருவடியின் கீழ், மாயாதே தன் சத்தி வீழ்ந்து கிடக்கின்றான் என்று பொருள் ஆகும்
தெற்குநோக்குதல்:
ஆடவல்லான் தெற்கு நோக்கியே ஆடுகின்றா ர். யமபயத்தை நீக்கியருளி நம்மை உய்விப்ப தற்காக தென்றற்காற்றின் மீதும் தென் தமிழி ன் மீதும் உள்ள விருப்பாலும் தெற்கு நோக்கி இறைவன் ஆடுகின்றார் என நயம்படக் கூறுவார் திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர்.
இறைவனின் உடுக்கை – ஆக்கல்
அமைத்தகை – காத்தல்
ஏந்திய அனல் – அழித்தல்
ஊன்றிய திருவடி – மறைத்தல்
ஓம் நமசிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =

Most Popular